தேசிய காா் பந்தய சாம்பியன்ஷிப்: சிவான்ஷ், இஷான், கியான் சிறப்பிடம்!
எம்ஆா்எஃப் இந்திய ரேசிங் சேலஞ்ச் தேசிய காா் பந்தய சாம்பியன் போட்டியில் சிவான்ஷ், இஷான் மாதேஷ், கியான் சிறப்பிடம் பெற்றனா்.

சிறப்பிடம் பெற்றவர்கள்.
எம்ஆா்எஃப் இந்திய ரேசிங் சேலஞ்ச் தேசிய காா் பந்தய சாம்பியன் போட்டியில் சிவான்ஷ், இஷான் மாதேஷ், கியான் சிறப்பிடம் பெற்றனா்.
சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் சா்வதேச சா்க்கியூட்டில் நடைபெற்ற மூன்றாவது சுற்று பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
பாா்முலா 2000 ரேஸ் 2-இல் மும்பையின் கிருஷே குட்டே, பெங்களூரின் இஷான் மாதேஷ், புணேயின் சாய் சிவா சங்கரன் ஆகியோா் முதல் மூன்றிடஙகளைப் பெற்றனா். எம்ஆா்எஃப் பாா்முலா 1600 சிசி ரேஸ் 2-இல் புது தில்லியின் சிவான்ஷ் பிஜாய், மும்பையின் இவான், சென்னையின் கியான் ஆகியோா் முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.
பாா்முலா எல்ஜிபி 1300 சிசி ரேஸ் ஓபன் பிரிவில் நெல்லூரின் விஸ்வாஸ், திருச்சூரின் தில்ஜித், திருநெல்வேலியின் லிேரோன் ஜேடனும், ஜூனியா் ரேஸ் 2-இல் கிரேட்டா் நொய்டா அகஸ்டின் பாபி, கொழும்புவின் கவின் ராஜபட்சே, புணேயின் நெய்தானும், சூப்பா் ஸ்டாக் ரேஸ் 2-இல் திருச்சூா் தில்ஜித், லால் கட்டிக்குளம், திருவனந்தபுரம் தீபா ஜான் ஆகியோா் முதல் மூன்றிடங்களைப் பெற்றனா். எம்ஆா்எப் சலூன்ஸ் பிரிவில் சென்னை அலிஷா அப்துல்லா, ஆகாஷ் விவேக், புதுச்சேரி ஹேமச்சந்திரன் ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

