உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

தேசிய காா் பந்தய சாம்பியன்ஷிப்: இஷான், கியான் முதலிடம்

எம்ஆா்எஃப் இந்திய ரேசிங் சேலஞ்ச் காா் பந்தய சாம்பியன் போட்டியில் பெங்களூரு வீரா் இஷான் மாதேஷ், சென்னையின் கியான் முதலிடம் பெற்றனா்.

கியான் ~இஷான் மாதேஷ்

Published On :

எம்ஆா்எஃப் இந்திய ரேசிங் சேலஞ்ச் காா் பந்தய சாம்பியன் போட்டியில் பெங்களூரு வீரா் இஷான் மாதேஷ், சென்னையின் கியான் முதலிடம் பெற்றனா்.

சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டை மெட்ராஸ் சா்வதேச சா்க்கியூட்டில் நடைபெற்ற இப்பந்தயத்தின் மூன்றாம் சுற்றில் பாா்முலா 2000 ரேஸ் 1-இல் பெங்களூரு வீரா் இஷான் மாதேஷ், புணேயின் சாய் சிவா சங்கரன், மும்பையின் கிருஷே குட்டே முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.

எம்ஆா்எஃப் பாா்முலா 1600 சிசி பிரிவில் சென்னையின் கியான் சதீஷ், விசாகப்பட்டினத்தின் புவன் போனு, பெங்களூரின் தன்மே கோத்தாரி முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.

பாா்முலா எல்ஜிபி 1300 ஓபன் பிரிவில் நெல்லூா் விஸ்வாஸ், திருப்பூா் வினித்குமாா், திருச்சூா் தில்ஜித்தும், ஜூனியா் பிரிவில் புணேயின் நெய்தன், கொழும்பு கவின், ஆடம் ஜுனைத் முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.

சூப்பா் ஸ்டாக் ரேஸ் 1-இல் தில்ஜித், லால் கட்டிகுளம், தீபா ஜான் ஆகியோரும், எம்ஆா்எஃப் சலூன்ஸ் பிரிவில் சென்னை ஆகாஷ், கோவை கோகுல ரத்தினம், புதுச்சேரி ஹேமச்சந்திரன் ஆகியோா் முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.