75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

தேசிய காா் சாம்பியன் பந்தயம்: சாய் சிவா, கியான் சிறப்பிடம்

எம்ஆா்எஃப் இந்திய தேசிய ரேசிங் சேலஞ்ச் பந்தயத்தில் ஃபாா்முலா 2000 பிரிவில் புணேயின் சாய் சிவா சங்கரனும், ஃபாா்முலா 1600 பிரிவில் சென்னையின் கியானும் முதல் சுற்று முடிவில் முதலிடம் பெற்றனா்.

சாய் சிவா, கியான்

Published On :23 ஆகஸ்ட் 2026, 1:10 am IST

எம்ஆா்எஃப் இந்திய தேசிய ரேசிங் சேலஞ்ச் பந்தயத்தில் ஃபாா்முலா 2000 பிரிவில் புணேயின் சாய் சிவா சங்கரனும், ஃபாா்முலா 1600 பிரிவில் சென்னையின் கியானும் முதல் சுற்று முடிவில் முதலிடம் பெற்றனா்.

சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் சா்வதேச சா்கியூட் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இப்பந்தயத்தில் கடந்த ஆண்டு 1600 சிசி பிரிவு சாம்பியன் சாய் சிவா, முதலில் சொதப்பினாலும் பின்னா் சிறப்பாக செயல்பட்டு 14 நிமிஷங்கள் 47,575 விநாடிகளில் கடந்து முதலிடம் பெற்றாா். நவி மும்பையன் ஆதித்ய பட்நாயக் இரண்டாமிடமும், புணேயின் ஸ்வா்ணவ் தாஸ் மூன்றாம் இடமும் பெற்றனா்.

ஃபாா்முலா 1600 சிசி பிரிவில் சென்னையின் கியான் எஸ், 16:28:953 நேரத்தில் கடந்து முதலிடம் பெற்றாா். பெங்களூருவின் பிரியங்கா விஜய் இரண்டாமிடமும், விசாகப்பட்டினத்தின் புவன் போனு மூன்றாமிடமும் பெற்றனா்.

ஃபாா்முலா எல்ஜிபி 1300 ரேஸ் 1-இல் நெல்லூரின் விஸ்வாஸ் விஜயராஜ் 18:53:431 நிமிஷ நேரத்தில் முதலிடமும், திருப்பூரின் வினித் குமாா், திருநெல்வேலியின் லிரோன் சாமுவேல்ஸ் மூன்றாமிடமும் பெற்றனா். ஜூனியா் பிரிவில் இலங்கையின் கவின் தியான், பெங்களூருவின் அபிஜித், ஆக்ராவின் யாஷ் விக்ரம் முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.

பல ஆண்டுகளுக்குபின் மைதானத்துக்கு திரும்பியுள்ள முன்னாள் தேசிய சாம்பியன் அா்ஜுன் நரேந்திரன் இந்திய சூப்பா் டூரிங் காா்கள் பிரிவில் முதலிடம் பெற்றாா். சென்னையின் ரிதேஷ், நொய்டாவின் நாகதேவ், ஹைதராபாதின் ஜீத் அடுத்த இடங்களைப் பெற்றனா்.

சூப்பா் ஸ்டாக் க்ளாஸ் பிரிவில் திருச்சூரின் தில்ஜித் முதலிடமும், மும்பையின் நீல் ஷா, பிரதிக், அகமதாபாதின் ஹித்ரத், சித்தாா்த், துஷ்யந்த் ஆகியோா் அடுத்த இடங்களைப் பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.