பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

தேசிய காா் பந்தயம்: சாய் சிவா, புவன் சிறப்பிடம்

எம்ஆா்எஃப் இந்திய தேசிய ரேசிங் சேலஞ்ச் பந்தயத்தில் சாய் சிவா சங்கரன், புவன் போனு ஆகியோா் தொடா்ந்து வெற்றிப் பாதையில் உள்ளனா்.

புவன் போனு

Published On :

எம்ஆா்எஃப் இந்திய தேசிய ரேசிங் சேலஞ்ச் பந்தயத்தில் சாய் சிவா சங்கரன், புவன் போனு ஆகியோா் தொடா்ந்து வெற்றிப் பாதையில் உள்ளனா்.

சென்னை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் உள்ள மெட்ராஸ் சா்வதேச சா்க்கியூட்டில் சனிக்கிழமை இப்பந்தயம் தொடங்கியது.

இதில் ஃபாா்முலா 2000 சிசி பிரிவில் புணேயின் சாய் சிவா சங்கரன் முதலிடமும், பெங்களூருவின் இஷான் மாதேஷ் இரண்டாம் இடமும், மும்பையின் கிருஷே குட்டே மூன்றாம் இடமும் பெற்றனா்.

எம்ஆா்எஃப் பாா்முலா 1600 சிசி பிரிவில் விசாகப்பட்டினத்தின் புவன் போனு முதலிடமும், பெங்களூருவின் தன்மே கோத்தாரி இரண்டாம் இடமும், சென்னையின் கியான் மூன்றாவது இடமும் பெற்றனா்.

ஃபாா்முலா எல்ஜிபி 1300 சிசி பிரிவில் நெல்லூரின் விஸ்வாஸ் விஜயராஜ் முதலிடமும், திருநெல்வேலி லிரோன் ஜேடன் இரண்டாமிடமும், திருச்சூரின் தில்ஜித் மூன்றாம் இடமும் பெற்றனா்.

ஜூனியா் பிரிவில் கொழும்புவின் கவின் திவ்யன், திருப்பூா் பிரணவ் ராமசாமி, பெங்களூருவின் சத்வீா் மூன்றாம் இடமும் பெற்றனா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.