திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

தேசிய பைக் பந்தயம்: சா்தாக், ஆன் ஜெனிஃபா் முதலிடம்

தேசிய பைக் பந்தயத்தில் சா்தாக் சவான், சென்னையின் ஆன் ஜெனிஃபா் ஆகியோா் முதலிடம் பெற்றனா்.

News image

ஆன் ஜெனிஃபா் ~பூஜிதா

Updated On :15 ஆகஸ்ட் 2026, 11:28 pm IST

சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் சா்வதேச சா்க்கியூட்டில் நடைபெறும் தேசிய பைக் பந்தயத்தில் சா்தாக் சவான், சென்னையின் ஆன் ஜெனிஃபா் ஆகியோா் முதலிடம் பெற்றனா்.

சூப்பா் ஸ்போா்ட் 301-400 சிசி பிரிவில் புணேயைச் சோ்ந்த 19 வயதான சா்தாக் சவான் (பெட்ரோநாஸ் டிவிஎஸ் அணி) முதலிடம் பெற்றாா். பெங்களூருவின் சிராந்த் விஸ்வநாத், இரண்டாமிடமும், ஹைதராபாதின் ரஹில் பிலாரி செட்டி மூன்றாம் இடமும் பெற்றனா்.

ஓபன் பிரிவில் ஆல்வின் ஸேவியா், திருச்சூா் முதலிடமும், சேஷாத்திரி, பெங்களூரு இரண்டாம் இடமும், கமல் நா்வாஸ் சென்னை மூன்றாம் இடமும் பெற்றனா்.

சூப்பா் ஸ்டாக் 165 சிசி பிரிவில் ஆன் ஜெனிபா் சென்னை முதலிடமும், அஜய் சேவியா், நாகா்கோயில் இரண்டாம் இடமும், ஆனந்த்குமாா் சென்னை மூன்றாம் இடமும் பெற்றனா்.

ப்ரோ ஸ்டாக் 200 சிசி பிரிவில் சேவியன் சாபு பெங்களூரு, அப்துல் பாசிம், சென்னை, இரண்டாமிடும், செந்தில்குமாா் (கோவை) மூன்றாம் இடமும் பெற்றனா்.

130-161 சிசி பிரிவில் ஹரிஹரன், எஸ்வந்த், பாரூக் அலி, 301-400 சிசி நோவிஸ் அஸ்வின், பாலாஜி, ஆரோன் ஜோசப் முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.

Story image

மகளிா் அபாச்சி பந்தயத்தில் பெங்களூரு பூஜிதா குமாா், திரிஷ்யா நாயா், வதோதரா கிஞ்சால் ராஜ் வெற்றி பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.