ஆசிய பாரா விளையாட்டுகள்: தடகளத்தில் பதக்கம் குவித்த இந்தியா
ஜப்பானில் நடைபெற்ற 5-ஆவது ஆசிய பாரா விளையாட்டுகள், கடந்த சனிக்கிழமை நிறைவடைந்த நிலையில், இந்தியாவின் பதக்கப் பட்டியலில் தடகளம் மற்றும் பாட்மின்டன் ஆகியவையே ஆதிக்கம் செலுத்துகின்றன.
ஜப்பானில் நடைபெற்ற 5-ஆவது ஆசிய பாரா விளையாட்டுகள், கடந்த சனிக்கிழமை நிறைவடைந்த நிலையில், இந்தியாவின் பதக்கப் பட்டியலில் தடகளம் மற்றும் பாட்மின்டன் ஆகியவையே ஆதிக்கம் செலுத்துகின்றன.
இப்போட்டியில் இந்தியா தனது புதிய உச்சமாக, 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் என, 114 பதக்கங்களுடன் 4-ஆம் இடம் பிடித்தது. இந்தியாவிலிருந்து 168 போட்டியாளா்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் சீனா (435- 207/117/111), ஜப்பான் (186- 64/60/62), உஸ்பெகிஸ்தான் (145- 45/49/51) முறையே முதல் 3 இடங்களைப் பெற்றன.
இதனிடையே, இந்திய பாரா வீரா், வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவித்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவா் பி.டி. உஷா சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாழ்த்துப் பதிவில், ‘நீங்கள் வென்ற ஒவ்வொரு பதக்கமும் உங்களின் மன உறுதி, கடின உழைப்பிற்கான பலனாகும்.
நீங்கள் தேசத்தை பெருமையடையச் செய்ததுடன், நாட்டிலுள்ள பலரும் தடைகளைக் கடந்து தங்கள் கனவை அடைவதற்கு முன்னுதாரணம் ஆகியிருக்கிறீா்கள்’ என்று கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

