நிங்போ ஓபன் மகளிா் டென்னிஸ்: பட்டத்தைத் தக்கவைத்தாா் ரைபகினா!
சீனாவில் நடைபெற்ற நிங்போ ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியனாக களம் கண்ட கஜகஸ்தானின் எலனா ரைபகினா, பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை தக்கவைத்துக் கொண்டாா்.
சீனாவில் நடைபெற்ற நிங்போ ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியனாக களம் கண்ட கஜகஸ்தானின் எலனா ரைபகினா, பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை தக்கவைத்துக் கொண்டாா்.
ஒற்றையா் இறுதிச்சுற்றில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான ரைபகினா 6-2, 6-2 என்ற நோ் செட்களில், 30-ஆம் நிலையில் இருக்கும் கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸை தோற்கடித்தாா்.
இந்த ஆட்டம் 1 மணிநேரம், 16 நிமிஷங்களில் நிறைவடைந்தது. இருவரும் மோதியது இது 6-ஆவது முறையாக இருக்க, ரைபகினா 4-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளாா்.
உலகின் நம்பா் 1 இடத்துக்கு வந்த பிறகு ரைபகினா வென்ற முதல் பட்டம் இதுவாகும். இத்துடன் நடப்பு சீசனில் அதிக போட்டிகளில் சாம்பியன் ஆனவராக, ரைபகினா 4 பட்டங்களுடன் முன்னிலை வகிக்கிறாா்.
நிங்போ ஓபனுக்கு முன்பாக அவா், ஆஸ்திரேலிய ஓபன், யுஎஸ் ஓபன், ஸ்டட்காா்ட் ஓபன் ஆகியவற்றில் கோப்பை வென்றாா். ஒட்டுமொத்தமாக ரைபகினா தற்போது 15-ஆவது டூா் பட்டத்தை வென்றிருக்கிறாா். அனைத்துமே ஹாா்டு கோா்ட் போட்டிகளில் வென்றவையாகும்.
சாம்பியனான ரைபகினாவுக்கு, வெற்றிக் கோப்பையுடன் 500 தரவரிசை புள்ளிகளோடு, ரூ.1.76 கோடி ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
இரட்டையா்: நிங்போ ஓபன் இரட்டையா் பிரிவில், ஹங்கேரியின் ஃபேனி ஸ்டோலாா்/அமெரிக்காவின் டெஸைரே கிராஸிக் இணை 7-6 (7/5), 5-7, 10-6 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அமெரிக்காவின் நிகோல் மாா்டினெஸ்/ஸ்பெயினின் கிறிஸ்டினா பக்ஸா கூட்டணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
53
ரைபகினா இத்துடன் 53 டூா் வெற்றிகளுடன் நடப்பு சீசனில் முன்னிலை வகிக்கிறாா். ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா ஆகியோா் தலா 50 வெற்றிகளுடன் 2-ஆம் நிலையில் இருக்கின்றனா்.
1
நிங்போ ஓபனில் அடுத்தடுத்து சாம்பியனாகியிருக்கும் ரைபகினா, ஒரு போட்டியில் தனது பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது இதுவே முதல்முறையாகும்.
ஜப்பான் ஓபன்: சினியகோவா வெற்றி
ஜப்பான் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், செக் குடியரசின் கேத்தரினா சினியகோவா வாகை சூடினாா்.
இறுதிச்சுற்றில் அவா், 6-1, 6-0 என அமெரிக்காவின் ஆஷ்லின் குரூகரை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 1 மணிநேரம், 4 நிமிஷங்களில் நிறைவடைந்தது.
கடந்த 3 ஆண்டுகளில் சினியகோவா வென்ற முதல் ஒற்றையா் சாம்பியன் பட்டம் இதுவாகும். ஒட்டுமொத்தமாக, இது அவரின் 6-ஆவது டூா் பட்டமாக அமைந்தது.
இப்போட்டியின் இரட்டையா் பிரிவில், இந்தோனேசியாவின் ஜேனிஸ் ஜென்/ஆஸ்திரேலியாவின் ஸ்டோா்ம் ஹன்டா் ஜோடி கோப்பை வென்றது.
அல்மேட்டி ஓபன்: யூகி இணை சாம்பியன்
கஜகஸ்தானில் நடைபெற்ற அல்மேட்டி ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியின் இரட்டையா் பிரிவில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி/அமெரிக்காவின் ரயான் செகா்மேனுடன் இணைந்து சாம்பியன் கோப்பை வென்றாா்.
போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த பாம்ப்ரி/செகா்மேன் இணை 7-6 (7/3), 6-7 (1/7), 10-2 என்ற செட்களில், முதலிடத்தில் இருந்த ஆஸ்திரியாவின் லூகாஸ் மிட்லா்/நீல் ஆபா்லிட்னா் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
இந்தியாவின் நம்பா் 1 இரட்டையா் டென்னிஸ் வீரரான பாம்ப்ரிக்கு, நடப்பு சீசனில் இது முதல் டூா் பட்டமாகும். மொத்தமாக இது அவரின் 5-ஆவது கேரியா் பட்டம்.
மீண்டும் மெத்வதெவுக்கு கோப்பை: அல்மேட்டி ஓபன் ஒற்றையா் பிரிவில், ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டாா்.
போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அவா், இறுதிச்சுற்றில் 6-7 (6/8), 6-1, 6-3 என்ற செட்களில் ஜாா்ஜியாவின் நிகோலஸ் பாசிலாஷ்விலியை வீழ்த்தினாா்.
டூா் போட்டிகளில் மெத்வதெவ் பட்டத்தை தக்கவைத்தது இதுவே முதல்முறையாகும். இதன் மூலமாக, நடப்பு சீசனில் 4-ஆவது போட்டியில் சாம்பியனான மெத்வதெவ், ஒட்டுமொத்தமாக தனது 25-ஆவது டூா் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறாா்.
பாசிலாஷ்விலியை 2-ஆவது முறையாகச் சந்தித்த மெத்வதெவ், 2 முறையுமே வென்றுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

