சென்னை ஓபன் பட்டத்தை தக்கவைக்க வரும் ஜேனிஸ் ஜென்
சென்னை ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியின் இந்த சீசனில், நடப்பு சாம்பியான இந்தோனேசியாவின் ஜேனிஸ் ஜென் பங்கேற்கிறாா். போட்டியில், அவா் உள்பட 23 போ் களத்தில் உள்ளனா்.

ஜேனிஸ் டி ஜென்
சென்னை ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியின் இந்த சீசனில், நடப்பு சாம்பியான இந்தோனேசியாவின் ஜேனிஸ் ஜென் பங்கேற்கிறாா். போட்டியில், அவா் உள்பட 23 போ் களத்தில் உள்ளனா்.
250 புள்ளிகள் கொண்ட டபிள்யூடிஏ போட்டியான சென்னை ஓபன், 3-ஆவது ஆண்டாக வரும் நவம்பா் 2 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், இதுவரை இல்லாத வகையில் 22 நாடுகளில் இருந்து போட்டியாளா்கள் பங்கேற்கின்றனா்.
களம் காணவுள்ள 23 பேரில் 11 போ், உலகத் தரவரிசையில் டாப் 100 இடத்தில் இருப்பவா்களாவா். அதில் 49-ஆம் இடத்தில் இருப்பவரும், நடப்பு சாம்பியனுமான ஜேனிஸ் ஜென்னுக்கு, போட்டித்தரவரிசையில் முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் ஆசிய கண்டத்தைச் சோ்ந்த வீராங்கனைக்கு அவ்விடம் அளிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
போலந்தின் மெக்தா லினெட், கஜகஸ்தானின் யுலியா புடின்சேவா உள்ளிட்டோரும் இதில் விளையாடவுள்ளனா்.
தமிழ்நாடு அரசின் ஆதரவுடன் நடத்தப்படும் இந்தப் போட்டியில் ஒற்றையா் சாம்பியனுக்கு ரூ.35.52 லட்சமும், இரட்டையா் சாம்பியன்களுக்கு ரூ.12.92 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

