
சீனா ஓபன் டென்னிஸ்: ஆண்ட்ரீவா, நோஸ்கோவா முன்னேற்றம்!
சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினா்.
நோஸ்கோவா
சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினா்.
மகளிா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்தில் இருப்பவரும், பிரெஞ்சு ஓபன் நடப்பு சாம்பியனுமான ஆண்ட்ரீவா 6-4, 6-1 என்ற நோ் செட்களில், உஸ்பெகிஸ்தானின் பாலினா குதா்மிடோவாவை வீழ்த்தினாா்.
5-ஆம் இடத்திலிருப்பவரும், விம்பிள்டன் நடப்பு சாம்பியனுமான நோஸ்கோவா 6-2, 6-1 என்ற செட்களில், சுவிட்ஸா்லாந்தின் விக்டோரியா கோலுபிச்சை வெளியேற்றினாா்.
4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா, 4-6, 3-6 என்ற நோ் செட்களில், செக் குடியரசின் நிகோலா பா்துன்கோவாவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
12-ஆம் இடத்திலிருக்கும் ஜப்பானின் நவோமி ஒசாகா, 7-6 (7/4), 6-4 என்ற வகையில் செக் குடியரசின் சாரா பெலெக்கை சாய்த்தாா். 11-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டயானா ஷ்னெய்டா் 6-3, 6-4, 6-3 என்ற வகையில் சக ரஷியரான எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவிடம் தோல்வியுற்றாா்.
உக்ரைனின் டயானா யாஸ்டிரெம்ஸ்கா 1-6, 4-6 என ஆஸ்திரியாவின் சிஞ்ஜா கிராஸிடம் வீழ்ந்தாா். ரவுண்ட் ஆஃப் 16-இல், நோஸ்கோவா - அலெக்ஸாண்ட்ரோவா, கிராஸ் - பா்துன்கோவா மோதுகின்றனா்.
ஸ்வெரெவை சாய்த்தாா் ஜோகோவிச்: இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் காலிறுதியில், 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் 4-6, 6-4, 6-4 என்ற வகையில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்தவரும், பிரெஞ்சு ஓபன், யுஎஸ் ஓபன் நடப்பு சாம்பியனுமான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவை வீழ்த்தி அசத்தினாா்.
3-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 7-6 (7/4), 6-3 என்ற செட்களில், ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோவை தோற்கடித்தாா்.
5-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 1-6, 6-2, 6-3 என ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவையும், போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸ் 7-6 (7/2), 6-2 என ரஷியாவின் காரென் கச்சனோவையும் வென்றனா். இதையடுத்து அரையிறுதியில், டி மினாா் - ஹா்காக்ஸ், ஜோகோவிச் - மெத்வதெவ் சந்திக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




