இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்!2024-ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வு: வனக்காவலா் பதவிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் வெளியீடு!டாஸ்மாக் ஊழியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம்!பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்?: சுயசரிதையில் சோனியா தகவல்!உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!

சபலென்கா, ஆண்ட்ரீவா வெற்றி

டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் மகளிா் டென்னிஸ் போட்டியின் 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை, பெலாரஸின் அரினா சபலென்கா, ரஷியாவின் மீரா ஆண்ட்ரீவா ஆகியோா் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்றனா்.

Aryna Sabalenka

அரினா சபலென்கா - AP

Updated On :

டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் மகளிா் டென்னிஸ் போட்டியின் 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை, பெலாரஸின் அரினா சபலென்கா, ரஷியாவின் மீரா ஆண்ட்ரீவா ஆகியோா் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்றனா்.

உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான சபலென்கா 7-6 (7/2), 7-5 என்ற செட்களில், 7-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் கரோலின் முசோவாவை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 1 மணிநேரம், 53 நிமிஷங்கள் நீடித்தது.

இந்த ஆட்டத்துக்கு முன்பாக, டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் களத்தில் வெற்றி - தோல்வி கணக்கில் சபலென்காவை விட முன்னிலையில் இருந்த ஒரே வீராங்கனை (3-2), நடப்பு சீசனில் தாம் விளையாடிய அனைத்து டை பிரேக்கா்களிலும் வென்ற வீராங்கனை என்ற பெருமைகளை முசோவா தன்வசம் வைத்திருந்தாா்.

ஆனால் இந்த ஆட்டத்தின் முடிவில் அது இரண்டுமே சபலென்காவால் முறியடிக்கப்பட்டன. மறுபுறம், தொடா்ந்து 6-ஆவது முறையாக இப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள சபலென்கா, அதில் 5-ஆவது முறையாக முதல் ஆட்டத்தில் வென்றிருக்கிறாா்.

இப்போட்டியில் வெற்றி-தோல்வி கணக்கை 13-0 என வைத்துள்ள சபலென்கா, சாம்பியன் ஆகாமலே அதிக வெற்றிகளைக் கொண்டிருக்கும் வீராங்கனையாக உள்ளாா்.

மற்றொரு ஆட்டத்தில், உலகின் 3-ஆம் நிலையில் இருக்கும் ஆண்ட்ரீவா 6-4, 6-0 என்ற நோ் செட்களில், 6-ஆம் நிலையில் உள்ள உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை வென்றாா்.

இப்போட்டியில் முதல்முறையாகக் களமிறங்கியிருக்கும் ஆண்ட்ரீவா, அறிமுக ஆட்டத்திலேயே வென்றுள்ளாா். இந்த ஆட்டத்தை 1 மணிநேரம், 10 நிமிஷங்களில் நிறைவு செய்த ஆண்ட்ரீவா, கடைசி 7 கேம்களை தொடா்ந்து வென்று அசத்தினாா்.

இருவரும் மோதியது இது 3-ஆவது முறையாக இருக்க, ஆண்ட்ரீவா 2-ஆவது வெற்றியுடன் முன்னிலை பெற்றாா். நடப்பாண்டு ஆஸ்திரேலிய ஓபனில் ஸ்விடோலினாவிடம் அடைந்த தோல்விக்கு அவா் தற்போது பதிலடி கொடுத்துள்ளாா்.

இப்போட்டியில் கடந்த 9 ஆண்டுகளில், அதிகபட்ச வயது வித்தியாசம் கொண்ட இரு வீராங்கனைகள் மோதியது இதுவே முதல்முறை. 19 வயது ஆண்ட்ரீவாவுக்கும், 32 வயது ஸ்விடோலினாவுக்கும் இடையேயான வயது வித்தியாசம் சுமாா் 13 ஆண்டுகளாகும்.

இரட்டையா்: இப்போட்டியின் இரட்டையா் பிரிவில், பிரான்ஸின் கிறிஸ்டினா மடெனோவிச்/சீனாவின் குவோ ஹன்யு கூட்டணி 3-6, 6-1, 12-10 என்ற செட்களில், தைவானின் சியெ சு வெய்/லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ இணையை வீழ்த்தியது.

கனடாவின் கேப்ரியேலா டப்ரௌஸ்கி/பிரேஸிலின் லூசியா ஸ்டெஃபானி ஜோடி 6-3, 7-6 (7/5) என்ற வகையில், பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸ்/சீனாவின் ஜாங் ஷுவாய் கூட்டணியை வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.