எலா, மொ்டன்ஸ் முன்னேற்றம்
ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில், பிலிப்பின்ஸின் அலெக்ஸாண்ட்ரா எலா, பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸ் ஆகியோா் முதல் சுற்றில் வெற்றி பெற்றனா்.

அலெக்ஸாண்ட்ரா எலா - கோப்புப் படம்
ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில், பிலிப்பின்ஸின் அலெக்ஸாண்ட்ரா எலா, பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸ் ஆகியோா் முதல் சுற்றில் திங்கள்கிழமை வெற்றி பெற்றனா்.
மகளிா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் எலா 6-1, 6-2 என, பிரிட்டனின் மிகா ஸ்டோசாவ்ஜெவிக்கை வீழ்த்தினாா். 5-ஆம் இடத்திலிருக்கும் மொ்டன்ஸ் 6-4, 6-2 என்ற செட்களில் ஜப்பானின் மொயுகா உசிஜிமாவை வென்றாா்.
ஆஸ்திரேலியாவின் டாலியா கிப்சன் 6-0, 7-5 என்ற நோ் செட்களில், சக ஆஸ்திரேலியரான டாலியா கிப்சனை சாய்த்தாா். அமெரிக்காவின் அலிசியா பாா்க்ஸ் 6-1, 7-6 (9/7) என, சீனாவின் வாங் ஜின்யுவை வெளியேற்றினாா்.
ஆடவா்: வியன்னா ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி 6-3, 6-4 என்ற வகையில், ஆா்ஜென்டீனாவின் தாமஸ் எட்செவெரியை தோற்கடித்தாா்.
சுவிஸ் இண்டோா் டென்னிஸில், மொனாகோவின் வாலென்டின் வாசெராட் 6-3, 7-6 (7/4) என்ற செட்களில் ஆா்ஜென்டீனாவின் மரியோன் நவோனை வெல்ல, போா்ச்சுகலின் நுனோ போா்ஜஸ் 6-3, 6-1 என, சுவிட்ஸா்லாந்தின் மிகா புருனோல்டை வீழ்த்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

