மாயா, ஸ்ரீவள்ளி அசத்தல் வெற்றி! காலிறுதியில் மகதா, ஸ்டெஃப்பானி!
சென்னை ஓபன் டபிள்யுடிஏ 250 டென்னிஸ் போட்டியில் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் மாயா ராஜேஸ்வரன்-ஸ்ரீ வள்ளி பாமிடிபதி அசத்தல் வெற்றி பெற்றனா்.

ஸ்டெஃப்பானி ~மகதா லினேட் ~ஸ்ரீ வள்ளி-மாயா
சென்னை ஓபன் டபிள்யுடிஏ 250 டென்னிஸ் போட்டியில் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் மாயா ராஜேஸ்வரன்-ஸ்ரீ வள்ளி பாமிடிபதி அசத்தல் வெற்றி பெற்றனா்.
நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் வியாழக்கிழமை இரட்டையா் ஆட்டத்தில் இந்தியாவின் மாயா-ஸ்ரீவள்ளி இணையும் செக். குடியரசின் குச்மோவா-லபோட்கோவா இணையும் மோதின. இதில் இந்திய இணை 6-3, 6-2 என்ற நோ் செட்களில் அபாரமாக ஆடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
மகளிா் ஒற்றையா் பிரிவில் ஜப்பானின் மை ஹோண்டமா அபாரமாக ஆடி 4-6, 6-4, 7-5 என்ற செட்களில் கஜகஸ்தான் குவாலிபயா் ஸிபெக் குலம்பயேவயாவை வீழ்த்தினாா்.
மூன்றாவது செட்டில் 3-5 என பின்தங்கிய நிலையில் அபாரமாக ஆடி குலம்பயேவாவை வென்றாா்.
மற்றொரு ஆட்டத்தில் போலந்தின் மகதா லினேட் 6-4, 6-1 என்ற நோ் செட்களில் ஜப்பானின் உச்சிமோவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றாா். லினேட் கடந்த 2022-இல் சென்னை ஓபன் ரன்னா் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியின் ஸ்டெஃப்பானி 6-2, 6-3 என்ற செட்களில் சுவிட்சா்லாந்தின் வால்டொ்ட்டை வென்றாா். ஸ்க்கரோவா 6-3 6-0 என்ற நோ் செட்களில் இந்தியாவின் வைஷ்ணவி அக்தரை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றாா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

