லூயிஸ், ஷாய் ஹோப் அரை சதம்: நிதானமாக ரன்கள் எடுக்கும் மே.இ. அணி!
மேற்கிந்தியத் தீவுகள் அணி - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் லீட்ஸில் இன்று நடைபெற்று வருகிறது.


மேற்கிந்தியத் தீவுகள் அணி - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் லீட்ஸில் இன்று நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற மே.இ. அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. எவின் லூயிஸ், கெமர் ரோச் ஆகியோர் அந்த அணியில் இடம்பெற்றுள்ளார்கள். ஆப்கானிஸ்தான் அணியில் சயத் ஷிர்ஸாத், தவ்லத் ஸத்ரான் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.
புள்ளிகள் பட்டியலில் கடைசி இரு இடங்களை இரு அணிகளும் பிடித்துள்ளன. 9-வது இடத்தில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்த ஆட்டத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பெரிய அணிகளுக்குக் கடும் நெருக்கடி கொடுத்த ஆப்கானிஸ்தான் அணி, முதல் வெற்றியைப் பெற போராடும் என்றும் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த ஆட்டத்திலும் கெயில் ஏமாற்றினார். அவர், 7 ரன்களில் தவ்லத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எனினும் எவின் லூயில் ஆரம்பம் முதல் விரைவாக ரன்கள் எடுத்தார். இதனால் முதல் 10 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 1 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்தது.
அரை சதத்தை நெருங்கும்போது நிதானமாக ஆடினார் லூயிஸ். இதனால் அவர் 62 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். பிறகு 58 ரன்களில் ஆட்டமிழந்தார். மே.இ. அணி 25 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. 14.1 ஓவர்களின்போது அந்த அணி 71 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அதிக ரன்கள் எடுக்கமுடியாமல் போனது. எனினும் ஹெட்மையர் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 31 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 39 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். 65 பந்துகளில் அரை சதமெடுத்த ஷாய் ஹோப், 77 ரன்களில் நபி பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி 42 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்துள்ளது. பூரான் 20, ஹோல்டர் 6 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...