ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

வேண்டுமென்றே அடுத்த ஆட்டங்களில் தோற்று பாகிஸ்தானை இந்தியா வெளியேற்றும்: முன்னாள் வீரர் அதிரடிக் கருத்து!

பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற அவர்கள் விரும்பமாட்டார்கள். வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுடன்...

News image
Updated On :27 ஜூன் 2019, 10:46 am

எழில்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம், இந்த உலகக் கோப்பை போட்டியின் தொடக்கம் முதல் தோல்வியின்றி விளையாடி வந்த நியூஸிலாந்தின் வெற்றி நடைக்கு பாகிஸ்தான் தடை போட்டுள்ளது. 

7 ஆட்டங்கள் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி 7 புள்ளிகளுடன் 6-ம் இடத்தில் உள்ளது. மீதமுள்ள ஆட்டங்களை வென்றால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் சூழல் உருவாகியுள்ளது.

ஆனால் அப்படியொரு சூழல் உருவாக, இந்திய அணி அனுமதிக்காது என்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி. ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:

இந்திய அணி இதுவரை 5 ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளது. பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற அவர்கள் விரும்பமாட்டார்கள். வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுடன் இந்திய அணி இனி விளையாடும். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவர்கள் எப்படி விளையாடினார்கள் என்று எல்லோரும் பார்த்தோம். இந்திய அணியினர் எப்படி விளையாட வேண்டும் என்று திட்டமிட்டிருப்பது யாருக்கும் தெரியாது. அவர்கள் வேண்டுமென்றே தோற்றார்கள் என மக்கள் கூறமாட்டார்கள். ஆனால் மக்கள் எவ்விதக் குறையும் கூறமுடியாத அளவுக்கு இந்திய அணியினர் விளையாடுவார்கள் என்று கூறியுள்ளார். 

பசித் அலி, பாகிஸ்தானுக்காக 1993 முதல் 1996 வரை 19 டெஸ்ட் மற்றும் 50 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.