இந்திய அணிக்கு 249 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இலங்கை!
இந்திய அணிக்கு 249 ரன்கள் இலக்காக இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.


இந்திய அணிக்கு 249 ரன்கள் இலக்காக இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.
இந்தியா-இலங்கை மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி பிரேமதசா மைதானத்தில் நடைபெற்றது. டாஸை வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இந்திய அணியில் கே. எல்.ராகுல், அர்ஷ்தீப் சிங் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக ரிஷப் பண்ட், ரியான் பராக் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியின் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் 256 வீரர் ரியான் பராக் ஆவார்.
அவருக்கு விராட் கோலி தொப்பி வழங்கினார். இந்திய ஒருநாள் அணிக்கு தேர்வான முதல் அஸ்ஸாம் மாநில வீரர் என்ற பெருமையை 23 வயதான ரியான் பராக் பெற்றார்.
முதலில் பேட்டிங்கை தொடங்கிய இலங்கையின் பதும் நிசங்கா, ஃபெர்னாண்டோ ஆகியோர் நிதான ஆட்டத்தை கடைபிடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்த நிலையில் நிசங்கா 45 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரரான ஃபெர்னாண்டோ அதிகபட்சமாக 96 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த குஷல் மெண்டிஸ் 59 ரன்களும், கேப்டன் அசலங்கா 10 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட்களும், சிராஜ், அக்ஷர் படேல், சுந்தர், குல்தீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருக்கிறது. தொடரை சமன் செய்ய இந்திய அணி இந்தப் போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...