
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியதன் மூலம், தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது. இதன் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த டெஸ்ட் தொடர் வெற்றியின் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென்னாப்பிரிக்க அணி இரண்டு இடங்கள் முன்னேறி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் தரவரிசையில் அடுத்தடுத்த இடங்களுக்கு சறுக்கியுள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன. மேற்கிந்தியத் தீவுகள் கடைசி அணியாக 9-வது இடத்தில் உள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி தொடர்ச்சியாக 10-வது முறையாக டெஸ்ட் தொடரைக் கைப்பற்றுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.