
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரின்போது, முகமது ஷமிக்கு காயம் ஏற்பட்டது. கடந்த நவம்பருக்குப் பிறகு முகமது ஷமி இந்திய அணியில் இடம்பெறவில்லை. வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் முகமது ஷமி விளையாடுவார் எனக் கூறப்பட்டிருந்தது. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் முகமது ஷமி காயத்திலிருந்து குணமடைந்து இறுதிக்கட்ட பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி விளையாடுவாரா என்பது குறித்து பிசிசிஐ செயலர் ஜெய் ஷா பேசியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி விளையாடுவாரா என்பது குறித்து ஜெய் ஷா பேசியதாவது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி விளையாடுவாரா என்பது தேசிய கிரிக்கெட் அகாதெமியின் உடல் தகுதி அறிக்கை வெளியான பிறகே தெரிய வரும் என்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முகமது ஷமி டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8 போட்டிகளில் விளையாடியுள்ள முகமது ஷமி 31 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது சிறந்த பந்துவீச்சு 6/56. அந்த அணிக்கு எதிராக முகமது ஷமி இரண்டு முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.