Steve smith
ஸ்டீவ் ஸ்மித் (கோப்புப் படம்)படம் | ஐபிஎல்

ஒலிம்பிக் கிரிக்கெட்டில் விளையாட ஸ்டீவ் ஸ்மித் ஆர்வம்!

ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறுவது குறித்து அந்த அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.
Published on

ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறுவது குறித்து அந்த அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.

வருகிற 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறும் என சர்வதேச ஒலிம்பிக் குழு தரப்பில் ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறும் என கூறப்பட்டாலும், எத்தனை அணிகள் பங்கேற்கலாம் போன்ற விவரங்கள் எதுவும் ஒலிம்பிக் குழு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. போட்டிகள் டி20 வடிவில் நடத்தப்படவுள்ளது.

Steve smith
ஒரே ஓவரில் 39 ரன்கள் விளாசி யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்த வீரர்!

இந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்று விளையாடுவது சிறப்பான விஷயமாக இருக்குமென ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு டி20 கிரிக்கெட்டில் நான் விளையாடலாம். உலகெங்கிலும் டி20 லீக் தொடர்கள் நடைபெற்று வருவதால், மற்ற வீரர்களைக் காட்டிலும் என்னால் தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் விளையாட முடியும் என நினைக்கிறேன். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு டி20 போட்டிகளில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளேன். இந்த ஒப்பந்தம் முடிந்த ஓராண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டியில் இடம்பெற்று விளையாடுவது சிறப்பான விஷயமாக இருக்கும் என்றார்.

Steve smith
ஒலிம்பிக் கிரிக்கெட் வெற்றியை குறிவைக்கிறாரா பாட் கம்மின்ஸ்?

அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் 35 வயதாகும் ஸ்டீவ் ஸ்மித் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com