ஆல்ரவுண்டராக எனது சிறப்பான பங்களிப்பை வழங்குவேன்: கேமரூன் கிரீன்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என நம்புவதாக கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார்.
கேமரூன் கிரீன்
கேமரூன் கிரீன்
Published on
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என நம்புவதாக கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

கேமரூன் கிரீன்
ஷேன் வார்னேவின் மறைவு குறித்து பேசிய குல்தீப் யாதவ்!

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என நம்புவதாக கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் என்னால் முடிந்த அளவுக்கு எனது பங்களிப்பை அணிக்காக வழங்குவதற்கு தயாராக இருக்கிறேன். நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறேன். 70-வது மற்றும் 80-வது ஓவருக்கு இடையேயான ஓவர்களை வீசுவது குறித்து நானும் மிட்செல் மார்ஷும் எப்போதும் பேசி சிரித்துக் கொள்வோம். அந்த ஓவர்களில் பந்துவீச்சில் பெரிதாக வேகம் மற்றும் ஸ்விங் இருக்காது. அணிக்காக பந்துவீச்சில் எனது பங்களிப்பை வழங்குவேன். அணியில் ஆல்ரவுண்டராக எனது சிறப்பான பங்களிப்பை வழங்குவதில் மகிழ்ச்சி என்றார்.

கேமரூன் கிரீன்
ஓய்வை அறிவித்த கே.எல்.ராகுல்?  சர்ச்சையாகும் இன்ஸ்டா பதிவு! 

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேமரூன் கிரீன் மற்றும் மிட்செல் மார்ஷை பந்துவீச்சில் அதிகம் பயன்படுத்திக் கொள்ள ஆஸ்திரேலிய அணி திட்டமிட்டிருப்பதாக பாட் கம்மின்ஸ் அண்மையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com