முதல் டெஸ்ட்: வங்கதேசம் 47 ரன்கள் முன்னிலை!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 47 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.


பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 47 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 448 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, துணைக் கேப்டன் சௌத் ஷகீல் 141 ரன்கள் எடுத்தார்.
வங்கதேசம் தரப்பில் ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் ஹாசன் மஹ்முத் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மெஹிதி ஹாசன் மிராஸ் மற்றும் ஷகிப் அல் ஹசன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் எடுத்திருந்தது. முஸ்பிகூர் ரஹீம் 55 ரன்களுடனும், லிட்டன் தாஸ் 52 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
பாகிஸ்தானைக் காட்டிலும் 132 ரன்கள் பின் தங்கிய நிலையில், வங்கதேச அணி இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே லிட்டன் தாஸ் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, முஸ்பிகூர் உடன் மெஹிதி ஹாசன் மிராஸ் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய முஸ்பிகூர் ரஹீம் சதமடித்து அசத்தினார். அவருடன் உறுதுணையாக விளையாடி வரும் மெஹிதி ஹாசன் மிராஸ் அரைசதம் அடித்தார்.
தேநீர் இடைவேளையின்போது, வங்கதேச அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 495 ரன்கள் எடுத்திருந்தது. முஸ்பிகூர் ரஹீம் 173 ரன்களுடனும், மெஹிதி ஹாசன் மிராஸ் 50 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வங்கதேச அணி பாகிஸ்தானைக் காட்டிலும் 47 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...