
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள ஷிகர் தவானுக்கு இந்திய வீரர்கள் பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக் மற்றும் சௌரவ் கங்குலிக்குப் பிறகு இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக அணியில் ஷிகர் தவான் இடம் பிடித்தார். இந்திய அணிக்காக ஷிகர் தவான் 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பெறாமலிருந்த அவர், இன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள ஷிகர் தவானுக்கு இந்திய முன்னாள் வீரர்கள் உள்பட பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர்.
வீரேந்தர் சேவாக்
மொஹாலியில் தொடக்க ஆட்டக்காரராக எனது இடத்தை நிரப்பியதிலிருந்து இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் மிகவும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளீர்கள். ஓய்வுக்குப் பிறகான உங்களது வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமைய எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கௌதம் கம்பீர்
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்கான உங்களது பயணம் மிகவும் சிறப்பானது. எதிர்கால பயணங்களிலும் உங்களது மகிழ்ச்சி தொடர எனது வாழ்த்துகள்.
ஹார்திக் பாண்டியா
சர்வதேச கிரிக்கெட்டில் உங்களது பயணம் சிறப்பாக அமைந்தது. உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்ரேயாஸ் ஐயர்
வாழ்த்துகள். உங்களது எதிர்கால பயணங்கள் சிறக்க எனது வாழ்த்துகள்.
அனில் கும்ப்ளே
சர்வதேச கிரிக்கெட்டில் உங்களது சிறப்பானதாக அமைந்துள்ளது. வாழ்க்கையில் அடுத்த அத்தியாயம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
விவிஎஸ் லக்ஷ்மண்
மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதைத் தாண்டி, ஒரு சிறந்த மனிதராக ஷிகர் தவானை எனக்கு மிகவும் பிடிக்கும். அனைத்து சூழ்நிலைகளிலும் நேர்மறையாக இருப்பவர். உங்களது எதிர்கால பயணம் சிறக்க வாழ்த்துகள்.
வாசிம் ஜாஃபர்
மிகப் பெரிய தொடர்களில் சிறப்பாக விளையாடக் கூடியவர் ஷிகர் தவான். பெருமை அல்லது பாராட்டுகள் குறித்து அதிகம் கவலை கொள்ளாமல் அணியின் நலனுக்காக விளையாடுபவர். உங்களது இரண்டாவது இன்னிங்ஸுக்கு வாழ்த்துகள்.
சுரேஷ் ரெய்னா
ஷிகர் தவானின் கிரிக்கெட் பயணம் எண்ணற்ற சாதனைகளால் நிறைந்துள்ளது. அவருடன் இணைந்து கிரிக்கெட் விளையாடிய தருணங்கள் மறக்க முடியாதவை. உங்களது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.