டெஸ்ட் தரவரிசை வெளியீடு: கோலி, ஜெய்ஸ்வால் முன்னேற்றம்!

டெஸ்ட் தரவரிசை வெளியீடப்பட்டுள்ளது. இந்திய வீரர்களான விராட் கோலி, ஜெய்ஸ்வால் முன்னேற்றம்.
டெஸ்ட் தரவரிசை வெளியீடு: கோலி, ஜெய்ஸ்வால் முன்னேற்றம்!
Published on
Updated on
1 min read

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

இந்திய வீரர் விராட் கோலி 2 இடங்கள் முன்னேறி எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கேப்டன் ரோஹித் ஷர்மா ஒரு இடம் சரிந்து ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். முதல் 10 இடங்களுக்குள் முன்னேறிய இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

மான்செஸ்டரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட்,டெஸ்ட் தரவரிசையில் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

டெஸ்ட் தரவரிசை வெளியீடு: கோலி, ஜெய்ஸ்வால் முன்னேற்றம்!
இங்கிலாந்து அணியில் ஓரங்கட்டப்பட்டாரா டேவிட் மலான்?

பாகிஸ்தானின் பாபர் அசாம், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், ரோஹித் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் 3 இடங்கள் முன்னேறி நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ராவல்பிண்டியில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான பாகிஸ்தானின் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பாபர் அசாம் ஆறு இடங்கள் சரிந்து மூன்றாவது இடத்தில் இருந்து ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

மற்றொரு பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 171* ரன்கள் அடித்ததன் மூலம் 10 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இது அவரது சிறந்த தரநிலையாகும்.

டெஸ்ட் தரவரிசை வெளியீடு: கோலி, ஜெய்ஸ்வால் முன்னேற்றம்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டேவிட் மலான் ஓய்வு!

பாகிஸ்தானுக்கு எதிராக 191 ரன்கள் விளாசிய வங்கதேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் 7 இடங்கள் முன்னேறி 17வது இடத்திற்கு முன்னேறினார். இது அவரின் சிறந்த டெஸ்ட் தரநிலையாகும்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 3 ஆவது இடத்திலும், இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஏழாவது இடத்தையும் தக்கவைத்துக்கொண்டனர். இந்தியாவின் அனுபவமிக்க சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

டெஸ்ட் தரவரிசை வெளியீடு: கோலி, ஜெய்ஸ்வால் முன்னேற்றம்!
லக்னௌ அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் நியமனம்!

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ், 4 இடங்கள் முன்னேறி 16-வது இடத்திலும், இலங்கையின் அசித்த பெர்னாண்டோ 10 இடங்கள் முன்னேறி 17வது இடத்திலும், பாகிஸ்தானின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா 4 இடங்கள் முன்னேறி 33வது இடத்துக்கும், இங்கிலாந்தின் கஸ் அட்கின்சன் நான்கு இடங்கள் முன்னேறி 42 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஆல்-ரவுண்டர்களில், இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, அஷ்வின் தொடர்ந்து முதல் இரண்டு இடங்களையும், அக்சர் படேல் ஆறாவது இடத்திலும் உள்ளனர்.

டெஸ்ட் தரவரிசை வெளியீடு: கோலி, ஜெய்ஸ்வால் முன்னேற்றம்!
40 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் கிரிக்கெட் போட்டி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com