பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

லக்னௌ அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் நியமனம்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இயக்குநராக இருந்த ஜாகீர் கான் லக்னௌ அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜாகீர் கான் - படம்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் / எக்ஸ்

Published On :

மும்பை இந்தியன்ஸ் அணியின் இயக்குநராக ஜாகீர் கான் கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தார். 45 வயதாகும் ஜாகீர் கான் 100 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உடையவர்.

மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் தில்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக ஜாகீர் கானை நியமிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்த நிலையில் இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கௌதம் கம்பீர் ஆலோசகராக செயல்பட்ட இரண்டு ஆண்டுகளும் (2022 மற்றும் 2023) லக்னௌ அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கௌதம் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு அந்த அணி கோப்பையை வெல்ல உதவி புரிந்தார்.

அண்மையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்த இடத்துக்கு பெரிய வெற்றிடம் இருந்தது. தற்போது ஜாகீர் கான் இதனை நிரப்பவிருக்கிறார்.

கபில்தேவ்-க்குப் பிறகு இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளர்களில் வெற்றி பெற்ற ஒருவர் என்றால் அது ஜாகீர் கான். 2011 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்து கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

ஐபிஎல் தொடரில் 100 போட்டிகளில் விளையாடி 102 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். எகானமி 7.59 என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.