36 பந்துகளில் உர்வில் பட்டேல் அதிரடி சதம்! 6 நாள்களில் 2 சாதனைகள்!

குஜராத் வீரர் உர்வில் பட்டேல் 36 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
ஆட்டநாயகன் விருது வென்ற உர்வில் பட்டேல்
ஆட்டநாயகன் விருது வென்ற உர்வில் பட்டேல்படம் | குஜராத் கிரிக்கெட் சங்கம் எக்ஸ்
Published on
Updated on
1 min read

சையத் முஷ்டாக் அலி தொடரில் இந்தூரில் நடைபெற்ற 92-வது லீக் போட்டியில் உத்தரகண்ட் மற்றும் குஜராத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் அவ்னீஷ் சுதா உத்தரகண்ட் அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த உத்தரகண்ட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆதித்ய தாரே, ரவிக்குமார் சமத் இருவரும் தலா 54 ரன்கள் விளாசினர்.

குஜராத் அணி தரப்பில் விஷால் ஜெய்ஸ்வால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையும் படிக்க..:ரூ.2.63 கோடிக்கு ஏலம் போன டான் பிராட்மேன் தொப்பி!

பின்னர், 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆர்யா தேசாய் 23 ரன்னில் ஆட்டமிழக்க மற்றொரு ஆட்டக்காரர் உர்வில் பட்டேல் நங்கூரம் பாய்ச்சியது போல் களத்தில் கடைசி வரை நின்று அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 13.1 ஓவர்களில் குஜராத் அணி இலக்கை எட்டி வெற்றியைப் பதிவு செய்தது.

36 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்த உர்வில் பட்டேல் 41 பந்துகளில் 115 ரன்கள்(11 சிக்ஸர், 8 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதையும் படிக்க..:திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!

26 வயதான உர்வில் பட்டேல் வெறும் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார். கடந்த 6 நாள்களுக்கு முன்னதாக, நவ.27 ஆம் தேதி திரிபுராவுக்கு எதிரான போட்டியில் 28 பந்துகளில் சதம் அடித்து அனைவரையும் வியக்கவைத்தார்.

முதல் தரப் போட்டிகளில் அதிவேக சதமடித்த இந்தியர், சையத் முஷ்டாக் அலி தொடரில் அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனைகளுக்குச் சொந்தக்காரர் ஆனவர் தற்போது, 40 பந்துகளுக்கு குறைவாக 2 சதங்கள் விளாசியவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

இதையும் படிக்க..:பிங்க் பந்து கிரிக்கெட்டில் அசத்தும் டிராவிஸ் ஹெட்..! மீண்டும் ஆதிக்கம் செலுத்துவாரா?

கடந்த ஆண்டு குஜராத் டைடன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த உர்வில் பட்டேலுக்கு ஒரு போட்டியில்கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

பின்னர் அணியில் இருந்து கலட்டிவிடப்பட்டார். சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரூ.30 லட்சம் அடிப்படை விலையில் இருந்த இவரை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை.

இதுவரை 46 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள உர்வில் பட்டேல் 2 சதங்கள், 4 அரைசதங்கள் அடித்துள்ளார். கடந்த ஆண்டில் விஜய் ஹசாரே தொடரில் சத்தீஸ்கரில் நடைபெற்ற ஆட்டத்தில் 41 பந்துகளில் சதம் அடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க..:நியூசி., இங்கிலாந்து அணிகளுக்கு அபராதம்..! டபிள்யூடிசியில் புள்ளிகள் இழப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com