தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பிங்க் பந்து கிரிக்கெட்டில் இந்தியாவின் சாதனைகள்!

பிங்க் பந்து கிரிக்கெட்டில் இந்தியாவின் நிலை..

News image

இந்திய டெஸ்ட் அணி

(கோப்புப்படம்)

Updated On :4 டிசம்பர் 2024, 9:30 am

DIN

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பகல்- இரவு டெஸ்ட் போட்டிகளை பிரபலமாக்கும் நோக்கில் 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. மேலும், பகல்- இரவு டெஸ்ட் போட்டிக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பிங்க் நிறப் பந்துகள் பயன்படுத்தப்பட்டன.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது.

பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றிபெற்று சாதனை படைத்தது.

இவ்விரு அணிகளும் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

இந்திய அணி இதுவரை 4 பகல் இரவு ஆட்டங்களில் விளையாடியிருக்கிறது. அதில், 3-ல் வெற்றியும், அடிலெய்ட்டில் ஒரு தோல்வியையும் சந்தித்துள்ளது.

வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றிருக்கிறது. இந்திய அணிக்காக விராட் கோலி மட்டும் 4 பகல் - இரவு போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இந்தியா விளையாடிய பகல் - இரவு ஆட்டங்களின் முடிவுகள்

இந்தியா - வங்கதேசம் (இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்களில் வெற்றி) -2019(கொல்கத்தா)

இந்தியா - ஆஸ்திரேலியா (8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி) 2020(அடிலெய்ட்)

இந்தியா - இங்கிலாந்து (10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி)2021 (அஹமதாபாத்)

இந்தியா - இலங்கை(238 ரன்களில் வெற்றி) 2022

பகல் - இரவு போட்டிகளில் அதிக ரன்கள் விளாசியவர்கள்

விராட் கோலி- 277 ரன்கள் (4 போட்டிகள்)

ரோஹித் சர்மா- 173 ரன்கள் (3 போட்டிகள்)

ஸ்ரேயாஸ் ஐயர்- 155 ரன்கள் (1 போட்டிகள்)

பகல் - இரவு போட்டிகளில் அதிக விக்கெட்கள்

ரவிச்சந்திரன் அஸ்வின் - 18 விக்கெட்டுகள் (4 போட்டிகள்)

அக்‌ஷர் பட்டேல்- 14 விக்கெட்டுகள் (2 போட்டிகள்)

உமேஷ் யாதவ்- 11 விக்கெட்டுகள் (2 போட்டிகள்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.