விராட் கோலியின் சதங்கள் என்னை பயமுறுத்துகின்றன! -ஆஸி. முன்னாள் கேப்டன்

இந்திய வீரர் விராட் கோலி குறித்து ஆஸி. முன்னாள் கேப்டன் கருத்து..
மைக்கேல் கிளார்க்குடன் விராட் கோலி.
மைக்கேல் கிளார்க்குடன் விராட் கோலி.படம் | எக்ஸ்
Published on
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி குறித்து உலகக்கோப்பையை வென்று தந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி சதம் அடித்தபோது தனக்கு பதற்றமாக இருந்ததாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில், “விளையாட்டில் தோல்வி என்பது சாதாரணமானது தான், ஆனால், விராட் கோலியின் சதம் என்னை பதற்றமடைய வைத்துள்ளது” என்றார்.

இதையும் படிக்க..:36 பந்துகளில் உர்வில் பட்டேல் அதிரடி சதம்! 6 நாள்களில் 2 சாதனைகள்!

பார்டர் - கவாஸ்கர் தொடரில் யார் அதிக ரன்கள் குவிப்பார்கள் என்பது குறித்து சில வாரங்களுக்கு முன்பு கிளார்க்கிடம் கேள்வி கேட்கப்பட்ட போது அவர் விராட் கோலியின் பெயரை முதலாவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்தத் தொடரில் ஒரு இன்னிங்ஸிலாவது அவர் சதம் அடிப்பார் என்றும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். 2 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் ஃபார்மில் இல்லாத விராட் கோலிக்கு இந்தச் சதம் மேலும் ஒரு புத்துணர்வாக அமைந்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிராக சுழற்பந்து வீச்சில் சிக்கி சின்னாபின்னமான விராட் கோலி 3 போட்டிகளின் 6 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால், இவரால் ஆஸ்திரேலியாவின் பயங்கரமான வேகப்பந்துவீச்சை அவர் தாங்குவாரா? என அனைவரும் கேள்வியெழுப்பினர்.

இதையும் படிக்க..:ரூ.2.63 கோடிக்கு ஏலம் போன டான் பிராட்மேன் தொப்பி!

இருப்பினும், அவரின் அசத்தல் சதம் அனைவரின் கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 7 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி, இந்தத் தொடர் முழுவதும் ஒரு முக்கிய வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தொடரில் இன்னும் உள்ள 4 போட்டிகளில் விராட் கோலி ஒரு சதம் அடித்தாலும், பார்டர் - கவாஸ்கர் தொடரில் அதிக சதம் அடித்தவர் என்ற சச்சினின்(10 சதங்கள்) சாதனையை முறியடிப்பார்.

பார்டர் - கவாஸ்கர் தொடரின் 2-வது போட்டி அடிலெய்டில் பகல் - இரவு ஆட்டமாக டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும் கடந்த காலங்களில் நடந்த மோசமான நிகழ்வுகளுக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

2020-2021 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல்- அவுட் ஆகி மோசமான சாதனையை படைத்தது. இருப்பினும், இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க..:பிங்க் பந்து கிரிக்கெட்டில் அசத்தும் டிராவிஸ் ஹெட்..! மீண்டும் ஆதிக்கம் செலுத்துவாரா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com