
டெஸ்ட் கிரிக்கெட்டில் 5,00,000 ரன்கள் குவித்த முதல் அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது.
இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 378 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி நியூசிலாந்தைக் காட்டிலும் 533 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
5,00,000 ரன்கள்
நியூசிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியின்போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 5,00,000 ரன்களைக் கடந்த முதல் அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது.
இதையும் படிக்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்துள்ள அணிகள்
இங்கிலாந்து - 5,00,126 ரன்கள் (1082 போட்டிகள், 18,954 இன்னிங்ஸ்கள்)
ஆஸ்திரேலியா - 4,29,000 ரன்கள் (868 போட்டிகள், 15,183 இன்னிங்ஸ்கள்)
இந்தியா - 2,78,751 ரன்கள் (586 போட்டிகள், 10,119 இன்னிங்ஸ்கள்)