டி20 உலகக் கோப்பைத் தொடரில் இத்தாலிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
வில் ஜாக்ஸ் அதிரடி; இத்தாலிக்கு 203 ரன்கள் இலக்கு!
டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிரடியாக விளையாடிய வில் ஜாக்ஸ் 22 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டாம் பேண்டன் 30 ரன்கள், பில் சால்ட் 28 ரன்கள், சாம் கரண் 25 ரன்கள் மற்றும் ஜேக்கோப் பெத்தேல் 23 ரன்கள் எடுத்தனர்.
இத்தாலி தரப்பில் கிராண்ட் ஸ்டீவர்ட் மற்றும் கிறிஷான் கலுகாமேஜ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜேஜே ஸ்மட்ஸ், அலி ஹாசன் மற்றும் பென் மனேண்ட்டி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
ஜேமி ஓவர்டான் அபார பந்துவீச்சு; சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து!
203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இத்தாலி அணி, 20 ஓவர்களில் 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இங்கிலாந்து அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் இத்தாலியை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.
இத்தாலி அணியில் தொடக்க ஆட்டக்காரரான அந்தோனி மோஸ்கா முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அதன் பின், ஜேஜே ஸ்மட்ஸும் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜஸ்டின் மோஸ்கா மற்றும் கேப்டன் ஹாரி மனேண்ட்டி ஜோடி சேர்ந்தனர். கேப்டன் ஹாரி மனேண்ட்டி 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பின், ஜஸ்டின் மோஸ்கா மற்றும் பென் மனேண்ட்டி இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை இத்தாலியை சரிவிலிருந்து மீட்டது. அதிரடியாக விளையாடிய பென் மனேண்ட்டி 25 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.
ஜஸ்டின் மோஸ்கா 34 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். அதன் பின், களமிறங்கியவர்களில் கிராண்ட் ஸ்டீவர்ட் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கிராண் ஸ்டீவர்ட் 23 பந்துகளில் அதிரடியாக 45 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.
இங்கிலாந்து தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேமி ஓவர்டான் 4 ஓவர்களில் வெறும் 18 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். சாம் கரண் 3 ஓவர்களில் 22 ரன்களை விட்டுக் கொடுத்து அவரது பங்குக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜோஃப்ரா ஆர்ச்சர் இரண்டு விக்கெட்டுகளையும், வில் ஜாக்ஸ் மற்றும் அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் விளாசியதுடன், ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றி அசத்திய வில் ஜாக்ஸுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
Summary
England qualified for the Super 8 round of the T20 World Cup after winning their match against Italy.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒருநாள், டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்திய ஐசிசி!

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு 151 ரன்கள் இலக்கு!

டி20 உலகக் கோப்பை: வெளியேறியது இந்திய அணி; அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா!

ஹர்மன்பிரீத் கௌர் அரைசதம் விளாசல்; அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா?
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




