ஜஸ்பிரித் பும்ராவும் மனிதர்தான்... பந்துவீச்சாளர்களுக்கு ரோஹித் சர்மா கூறியதென்ன?

அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்குப் பிறகு பந்துவீச்சாளர்கள் குறித்து கேப்டன் ரோஹித் சர்மா பேசியது தொடர்பாக...
இந்திய அணி வீரர்கள்
இந்திய அணி வீரர்கள்படம் | AP
Published on
Updated on
1 min read

அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்குப் பிறகு பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ராவின் சுமையை பகிர்ந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், ஆஸ்திரேலிய அணி அடிலெய்டு டெஸ்ட்டில் அபார வெற்றி பெற்று இந்தியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

ஜஸ்பிரித் பும்ராவும் மனிதர்தான்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மோசமான தோல்விக்குப் பிறகு பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ராவும் மனிதர்தான். அவர் மட்டுமே எப்போதும் பொறுப்புகளை தனது தோளில் சுமக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மாபடம் | AP

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே பொறுப்பினை எடுத்துக்கொள்ள முடியாது. இரண்டு முனைகளில் இருந்தும் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச வேண்டும் என நம்மால் எதிர்பார்க்க முடியாது. மற்ற பந்துவீச்சாளர்களும் அவரிடமிருந்து பொறுப்பினை பகிர்ந்து கொள்ள வேண்டும். பும்ராவுக்கு விக்கெட் கிடைக்காத நாள்களும் இருக்கும் என்றார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com