
பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற இரண்டாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான முதல்நாள் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகியுள்ளது.
ஏற்கனவே, அடிலெய்டு டெஸ்ட்டில் மூன்று நாள்களில் 1,35, 012 ரசிகர்கள் பார்வையிட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாக்ஸிங் டே டெஸ்ட் என்றால் என்ன?
டிச. 26 முதல் 30 வரை நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் எனப்படும். இது முதன்முதலாக 1950இல் இங்கிலாந்தும் ஆஸ்திரேலிய அணியும் விளையாடின.
ஆஸ்திரேலியாவில் பொதுவாக மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டிகள் நடைபெறும்.
சாதனை படைக்குமா?
இந்த நிலையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
பாக்ஸிங் டே டெஸ்ட்டின் முதல் நாளுக்கான பொதுமக்கள் பிரிவுக்கான அனைத்து டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. டிச.24ஆம் தேதி இரவு சிறிய அளவிலான டிக்கெட்டுகள் ஐசிசி இல்லாத நாட்டைச் சேர்ந்தவர்களுக்காக விற்கப்பட வாய்ப்பிருக்கிறதென கூறியுள்ளது.
இதற்கு முன்பு இந்தியா - ஆஸி. மோதிய டெஸ்ட்டில் 2014-15இல் 1,13, 009 பார்வையாளர்கள் பங்கேற்றதே அதிகபட்சமாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.