விமர்சனத்துக்கு பதிலடியாக கம்மின்ஸின் கொண்டாட்டம்..! கில்கிறிஸ்ட் புகழாரம்!

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸின் வெற்றிக் கொண்டாட்டம் மிகவும் ஆக்ரோஷமாக இருந்ததாக கில்கிறிஸ்ட் புகழ்ந்துகூறியுள்ளார்.
பாட் கம்மின்ஸின் வெற்றிக் கொண்டாட்டம்
பாட் கம்மின்ஸின் வெற்றிக் கொண்டாட்டம்படங்கள்: பிடிஐ
Published on
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 295 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற ஆஸ்திரேலியா இரண்டாவது டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.

இதன்மூலம் தொடர் 1-1 என சமநிலையில் இருக்கிறது. 3ஆவது டெஸ்ட் டிச.14இல் பிரிஸ்பேனில் நடைபெறுகிறது.

இரண்டாவது டெஸ்ஸ்டில் இந்தியாவின் 20 விக்கெட்டுகளையும் 3 வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.

கம்மின்ஸ் 2ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

இந்தநிலையில் முன்னாள் ஆஸி. வீரர் கில்கிரிஸ்ட் கூறியதாவது:

ஒவ்வொரு விக்கெட்டுக்கும் கம்மின்ஸின் கொண்டாட்டம் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது.

பெர்த்தில் மோசமாக விளையாடியதால் வந்த விமர்சனங்கள் அவர்களை தாக்கியிருப்பதை கவனிக்கலாம். முதல் டெஸ்ட்டில் விளையாடியது ஒவ்வொருவர் மனதுக்குள்ளும் மிகவும் கவலையடைந்திருக்கிறார்கள்.

அதனால்தான் அடிலெய்டில் அவர்களது கொண்டாட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. ஆஸி. வீரர்கள் அவர்கள் நினைத்ததுபோல விளையாடினார்கள்.

கம்மின்ஸ் தனது தலைசிறந்த செயல்பாடுகளை வழங்கினார். பெர்த் டெஸ்ட் முடிந்ததும் கம்மின்ஸுக்கு சிறிது கிரீஸ், எண்ணெய் மாற்றவேண்டி இருந்ததுபோல மிகவும் சிறப்பாக விளையாடினார். மகிழ்ச்சியில் உறுமிக்கொண்டே இருந்தார். அதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

பந்துவீச்சாளர்கள் அணியாக இருந்தார்கள். லயன் ஒரு ஓவர், மார்ஷ் 4 ஓவர்கள். மீதியெல்லாம் மற்ற மூன்று பெரிய வீரர்கள் ஸ்டார்க், போலாண்ட், கம்மின்ஸ் வேட்டையாடினார்கள். அணியாக அவர்கள் விளையாடியதைப் பார்க்க சிறப்பாக இருந்தது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com