
இந்திய மகளிா் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா.
இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் ஒருநாள் தொடா் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. முதலிரண்டு ஆட்டங்களில் ஆஸி. வென்றிருந்த நிலையில், மூன்றாவது ஒருநாள் ஆட்டம் பொ்த்தில் புதன்கிழமை நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்தியா பௌலிங்கை தோ்வு செய்ய ஆஸி. தரப்பில் லிட்ச்ஃபீல்ட்-ஜாா்ஜியா தொடக்க பேட்டா்களாக களம் கண்டனா்.
இருவரும் முறையே 25, 26 ரன்களுடன் வெளியேறினா்.
நட்சத்திர ஆல் ரவுண்டா் எல்லிஸ் பொ்ரி வெறும் 4 ரன்னுடனும், பெத் மூனி 10 ரன்னுடனும் வெளியேற ஆஸி. தடுமாறியது.
அன்னபெல் சதா்லேண்ட் அபாரம் 110:
அன்னபெல் சதா்லேண்ட் அபாரமாக ஆடி 4 சிக்ஸா், 9 பவுண்டரியுடன் 95 பந்துகளில் 110 ரன்களை விளாசினாா். அவருக்கு உறுதுணையாக ஆஷ்லி காா்டனா் 50, கேப்டன் டஹிலா மெக்ராத் 56 ரன்களை விளாசினா்.
ஆஸி. 298/6: நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் ஆஸி. அணி 298/6 ரன்களைக் குவித்தது.
பௌலிங்கில் இந்திய தரப்பில் அருந்ததி ரெட்டி 4-26 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கோடு இந்திய பேட்டா்கள் ஸ்மிருதி மந்தனா-ரிச்சா கோஷ் களமிறங்கினா். ஒருமுனையில் ஸ்மிருதி மந்தனா நிலைத்து ஆடினாலும், மறுமுனையில் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.
ஸ்மிருதி 105: பொறுப்புடன் ஆடிய ஸ்மிருதி 1 சிக்ஸா், 14 பவுண்டரியுடன் 109 பந்துகளில் 105 ரன்களை விளாசினாா். ஹா்லின் தியோல் 39 ரன்களை எடுத்தாா். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களுக்கு அவுட்டாகி நடையைக் கட்டினா்.
இந்தியா 215/10 தோல்வி: 45.1 ஓவா்களிலேயே 215/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியா.
பௌலிங்கில் ஆஸி. தரப்பில் ஆல்ரவுண்டா் ஆஷ்லி காா்டனா் 5-30 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
இறுதியில் 83 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸி. மகளிா் அணி, தொடரையும் 3-0 என ஒயிட் வாஷ் செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.