
ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியில் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கடைசியாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நட்சத்திர பந்துவீச்சாளர் ரஷீத்கான் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
டி20 போட்டியில் தொடரை வென்ற ஆப்கானிஸ்தான் அணி நாளை(டிச.17) நடைபெறும் ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.
3 ஆண்டுகளுக்குப் பின்னர் அணிக்குத் திரும்பிய ரஷீத் கான் பெயருடன் மொத்தமாக 18 பேர் கொண்ட அணியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்காக 200 க்கும் மேற்பட்ட டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரஷீத்கான் வெறும் 5 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அதில், 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், அறிவிக்கப்பட்டுள்ள அணியில் 7 புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
போட்டி அட்டவணை
முதல் டெஸ்ட்: டிசம்பர் 26-30 (புலவாயோ)
2-வது டெஸ்ட்: ஜன்வரி 2-6 (புலவாயோ)
ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணி: ஹஷ்மத்துல்லா ஷாஹிடி (கேப்டன்), ரஹ்மத் ஷா (துணை கேப்டன்), இக்ரம் அலிகைல் (விக்கெட் கீப்பர்), அஃப்சர் ஜசாய் (விக்கெட் கீப்பர்), ரியாஸ் ஹசன், செடிகுல்லா அடல், அப்துல் மாலிக், பஹீர் ஷா மஹ்பூப், இஸ்மத் ஆலம், ஹஸ்மத்துல்லா உமர்சாய், ஜாஹிர் கான், ஜியா உர் ரஹ்மான் அக்பர், ஜாஹிர் ஷேசாத், ரஷீத் கான், யாமின் அஹ்மத்சாய், பஷீர் அகமது ஆப்கான், நவீத் சத்ரான், ஃபரீத் அகமது மாலிக்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.