பும்ரா - ஆகாஷ்  | டேனியல் வெட்டோரி
பும்ரா - ஆகாஷ் | டேனியல் வெட்டோரி

பும்ரா - ஆகாஷ் தீப் கூட்டணி எங்கள் திட்டத்தை முறியடித்தது: ஆஸி. பயிற்சியாளர்!

பும்ரா - ஆகாஷ் தீப் கூட்டணி எங்கள் திட்டத்தை முறியடித்தது என்று ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
Published on

பும்ரா - ஆகாஷ் தீப் கூட்டணி எங்கள் திட்டத்தை முறியடித்தது என்று ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3-வது போட்டி பிரிஸ்பேனின் காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

ஒரு கட்டத்தில் 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக இருந்த நிலையில் கேஎல். ராகுல் - ஜடேஜா இருவரும் இணைந்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இதையும் படிக்க..: ஹேசில்வுட் இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து விலகல்!

இறுதியில் இந்திய அணி பாலோ-ஆன் ஆவதை தடுத்து 10-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த துணைக் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா - ஆகாஷ் தீப் கூட்டணி 39 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர். இதனால், இந்த டெஸ்ட் சமனில் முடிய வாய்ப்பு உருவாகியுள்ளது.

அப்படி இல்லாமல் இந்திய அணி பாலோ ஆன் ஆகியிருந்தால், மீண்டும் இந்திய அணி பேட்டிங் செய்து தோல்வியைத் தழுவவும் வாய்ப்பு உருவாகியிருக்கும்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி கூறுகையில், “இந்திய டெய்லெண்டர்களான பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் இருவரும் இணைந்து இந்திய அணியை பாலோ ஆன் ஆவதில் இருந்து மீட்டுள்ளனர். அவர்களின் கூட்டணி எங்கள் திட்டங்கள் அனைத்தையும் முடியடித்துள்ளது.

இதையும் படிக்க..:டெஸ்ட்டில் சாதனை படைத்த பாட் கம்மின்ஸ்!

ஆட்டத்தில் வெற்றிபெறுவதற்காக ஒரே வழி இந்திய அணியை பாலோ ஆன் ஆக வைப்பது தான் எங்கள் திட்டமாக இருந்தது. இந்திய அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்ற விரக்தி எங்களிடம் இருந்தது.

ஜடேஜா ஆட்டமிழந்த போது ஆட்டம் எங்கள் கைக்கு வந்து விட்டதாக நினைத்தோம். ஆனால், இறுதியில் பும்ரா, தீப் இருவரும் இணைந்து அணியை காப்பாற்றி விட்டனர். அவர்களின் கூட்டணி எங்கள் திட்டத்தை மிகவும் கடுமையாக மாற்றிவிட்டது.

வானிலைக்கு ஏற்றால் போல திட்டத்தை செயல்படுத்த வேண்டும். உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளரான ஹேசில்வுட் காயமடைந்தது ஆஸ்திரேலியாவுக்கு மேலும் பின்னடைவு என்றாலும், ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் இருவரும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சின் பலமாக உள்ளனர்” என்றார்.

213 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளுடன் இந்திய அணி பரிதாபமான நிலையில் இருந்த போது பாலோ-ஆனைத் தவிர்க்க 33 ரன்கள் தேவைப்பட்டன. பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் இருவரும் இணைந்து 39 ரன்கள் பாட்னர் ஷிப் அமைத்து களத்தில் உள்ளனர்.

இதையும் படிக்க..:ரன் குவிப்பின் மந்திரம் என்ன? கே.எல்.ராகுல் பேட்டி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com