மன நிம்மதியாக இருக்கிறது..! ஓய்வு குறித்து அஸ்வின் பேட்டி!

ஓய்வை அறிவித்தது மன நிம்மதியாக இருப்பதாக அஸ்வின் பேட்டியளித்துள்ளார்.
அஸ்வின் பேட்டி
அஸ்வின் பேட்டி
Published on
Updated on
1 min read

ஓய்வை அறிவித்தது மன நிம்மதியாக இருப்பதாக அஸ்வின் பேட்டியளித்துள்ளார்.

இந்தியாவின் பௌலிங் ஆல்-ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் (38), சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (டிச.18) அறிவித்தாா்.

பாா்டா் - காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணியிலிருக்கும் அவா், கிரிக்கெட் உலகமும், ரசிகா்களும் எதிா்பாராத இந்த முடிவை, தொடரின் இடையே அறிவித்திருக்கிறாா். ஐபிஎல் உள்ளிட்ட லீக் போட்டிகளில் அவா் தொடா்ந்து விளையாடவுள்ளாா்.

தற்போது, சென்னை வந்தடைந்த அஸ்வின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

அதில் அஸ்வின் பேசியதாவது:

மன நிம்மதி

இங்கு வந்திருக்கும் பலரை ஏற்கனவே சந்தித்திருக்கிறேன். எனக்காக வந்தவர்களுக்கு நன்றி. இவ்வளவு பேர் வருவார்கள் என நினைக்கவே இல்லை. கடைசியாக 2011இல் உலகக் கோப்பை முடித்துவிட்டு வரும்போது இப்படி இருந்தது.

டெஸ்ட் போட்டி முடித்துவிட்டு வரும்போது இவ்வளவு பேர் வந்தது மகிழ்ச்சி. இந்தநாளை என்னுடைய நாளாக மாற்றியதுக்கு நன்றி.

ஓய்வு அறிவித்தது கவலையளிக்கவில்லை. தனிப்பட்ட விதத்தில் மனநிம்மதியாகவும் திருப்தியாகவும் இருக்கின்றன.

இது என்னுடைய மனதில் நீண்ட நாள்களாக ஓடிக்கொண்டிருந்தது. திடீரென டெஸ்ட்டின் நான்காவது நாள் தோன்றியது. 5ஆவது நாள் அறிவித்துவிட்டேன்.

சிஎஸ்கேவில் தொடர்ந்து விளையாடுவேன்

கடைசி 2 வருடங்களாக நான் விக்கெட் எடுத்தது நினைவுக்கு வருவதில்லை. அதுவே அடுத்த கட்டத்துக்கான அறிகுறியாக இருந்தது. இந்திய அணியின் கேப்டனாக ஆகவில்லை என்பதில் எனக்கு சிறிதும் கவலையே இல்லை.

என்னால் முடிந்த அளவுக்கு சிஎஸ்கே அணியுடன் விளையாடுவேன். இந்திய கிரிக்கெட்டராகத்தான் அஸ்வின் ஓய்வு, கிரிக்கெட்டராக இல்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com