அணித்தேர்வு குறித்து மறக்க நினைக்கிறேன்: ஆஸி. இளம் வீரர்!

ஆஸ்திரேலியாவின் இளம் பேட்டர் நடப்பு பிஜிடி தொடரில் தேர்வாகாதது குறித்து பேசியுள்ளார்.
சாம் கொன்ஸ்டாஸ்
சாம் கொன்ஸ்டாஸ்படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவின் இளம் பேட்டர் நடப்பு பிஜிடி தொடரில் தேர்வாகாததை மறக்க நினைப்பதாகக் கூறியுள்ளார்.

19 வயதாகும் சாம் கொன்ஸ்டாஸ் பார்டர் - கவாஸ்கர் தொடரில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்குப் பதிலாக நாதன் மெக்ஸ்வீனி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 3 வாரங்களில் கொன்ஸ்டாஸ் இந்தியாவுக்கு எதிராக பிரைம் மினிஸ்டர் அணியில் கொன்ஸ்டாஸ் 107 ரன்களும் ஷீல்டு போட்டியில் 88 ரன்களும் சிட்னி தண்டர் அணியில் 56 ரன்களும் எடுத்தார்.

3 போட்டிகளில் பிஜிடி தொடரில் ஆஸி. தொடக்க வீரர்கள் சரியாக விளையாடவில்லை. மெக்ஸ்வீனி மட்டும் சில போட்டிகளில் சிறப்பாக விளையாடினார்.

38 வயதாகும் உஸ்மான் கவாஜா 11 இன்னிங்ஸாக அரைசதம்கூட அடிக்காமல் இருக்கிறார். அவரது சராசரி 12.6 என்ற அளவில் மிக மோசமாக இருக்கிறது.

சாம் கொன்ஸ்டாஸ் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். இரண்டு சதங்கள் அடித்து அசத்தினார். அதில் 55.83 சராசரி வைத்துள்ளார். தற்போது பிக் பேஷ் லீக்கில் விளையாடுகிறார்.

இந்த நிலையில் பேட்டியில் கொன்ஸ்டாஸ் கூறியதாவது:

போட்டியின் சூழ்நிலை குறித்து நான் புரிந்துகொள்கிறேன். பேட்டராக நான் பக்குவடைந்து வருகிறேன். கண்டிப்பாக நான் சில அசட்டுத்தனமான தவறுகளை செய்வேன். ஆனால், ஆட்டத்தை எப்போது உயர்த்த வேண்டும் என்பதை புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

தற்போது, நான் டேவிட் வார்னருடன் விளையாடுகிறேன். அவருடன் பேட்டிங் செய்யும் ஒவ்வொரு முறையும் எதாவது கற்றுக்கொள்ள முயல்கிறேன்.

‘என்ன நடந்ததோ அது நடந்தது. பயப்படாமல் கிரிக்கெட் விளையாடு’ என வார்னர் எனக்கு அறிவுரை வழங்கினார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com