இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு: ஆப்கன் வீரருக்கு அபராதம்!

நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆப்கன் வீரருக்கு அபராதம்..

News image
ஃபசல்ஹக் ஃபரூக்கி
Updated On :20 டிசம்பர் 2024, 12:26 pm

DIN

களநடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆப்கானிஸ்தான் வீரர் ஃபசல்ஹக் ஃபரூக்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஹராரேயில் நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரின் 2-வது ஒருநாள் போட்டியின் போது, ​​நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக ஆப்கானிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஃபசல்ஹக் ஃபரூக்கிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி நடத்தை விதியின் லெவல் 1-ஐ மீறியதற்காக ஃபரூக்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே இன்னிங்ஸின் 5-வது ஓவரில், கிரேக் எர்வினுக்கு எதிரான எல்பிடபிள்யூ நிராகரிக்கப்பட்டதால், ஃபரூக்கி நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

நடுவரின் முடிவை எதிர்த்தது மட்டுமல்லாமல், போட்டியில் டிஆர்எஸ் இல்லாத போதிலும் ஃபரூக்கி, டிஆர்எஸ் செய்யும் படி கைகளை காட்டினார். அபராதம் தவிர்த்து, அவருக்கு ஒரு ஐசிசி புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. ஃபரூக்கியும் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார்.

2-வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேயை 232 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.