
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடவில்லை. இதனையடுத்து, கே.எல்.ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இரண்டாவது போட்டிக்கு ரோஹித் சர்மா அணியில் இணைந்தபோதிலும், கே.எல்.ராகுலே தொடக்க ஆட்டக்காரராக தொடர்ந்தார்.
இதையும் படிக்க: ஃபாலோ ஆனை தவிர்ப்பதற்காக விளையாடவில்லை; மனம் திறந்த ஆகாஷ் தீப்!
கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாட, ரோஹித் சர்மா 6-வது வீரராக களமிறங்கினார். 6-வது வீரராக களமிறங்கி கடைசி 3 இன்னிங்ஸ்களில் ரோஹித் சர்மா 10, 3 மற்றும் 6 ரன்கள் முறையே எடுத்து ஆட்டமிழந்தார்.
அதிரடியாக விளையாட வேண்டும்
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 6-வது இடத்தில் பெரிதாக சோபிக்காத நிலையில், ரோஹித் சர்மா அவரது யுக்திகளை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும், அதிரடியாக விளையாட வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா அவரது யுக்திகளை சிறிது மாற்றிக் கொண்டு விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். ஏனெனில், அவரால் 6-வது இடத்தில் களமிறங்கி மிகவும் அதிரடியாக விளையாட முடியும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் எதிரணியின் பந்துவீச்சை அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க வேண்டும். தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தும் மனநிலையை ரோஹித் சர்மா கைவிட வேண்டும். அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்க, நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.