ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

ஃபாலோ ஆனை தவிர்ப்பதற்காக விளையாடவில்லை; மனம் திறந்த ஆகாஷ் தீப்!

பிரிஸ்பேனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி குறித்து இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் மனம் திறந்துள்ளார்.

ஆகாஷ் தீப் - படம் | AP

Published On :

பிரிஸ்பேனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி குறித்து இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் மனம் திறந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி மிகவும் வலுவாக தொடங்கியது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இருப்பினும், அடிலெய்டில் நடைபெற்ற பிங்க் பந்து போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் மோசமான தோல்வியைத் தழுவியது. இரு அணிகளுக்கும் இடையிலான பிரிஸ்பேனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது.

மூன்றாவது போட்டி டிராவில் முடிய ஆகாஷ் தீப் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இடையேயான பார்ட்னர்ஷிப் மிகவும் உதவியாக இருந்தது.

டிராவை தவிர்க்க விளையாடவில்லை

பிரிஸ்பேனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஃபாலா ஆனை தவிர்ப்பதற்காக விளையாடவில்லை எனவும், அணிக்கு தனது பங்களிப்பை வழங்க நினைத்து விளையாடினேன் எனவும் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நானும் ஜஸ்பிரித் பும்ராவும் பின்வரிசை ஆட்டக்காரர்களாக களமிறங்குபவர்கள். அதனால், 25 அல்லது 30 ரன்கள் நாங்கள் குவித்தால், அது அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும். எனது மனதில் அணிக்காக என்னுடைய பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதே இருந்தது. அந்த நாளில் ஃபாலோ ஆனை தவிர்ப்பதற்காக நான் விளையாடவில்லை. ஆட்டமிழக்காமல் அணிக்கு எனது பங்களிப்பை வழங்க நினைத்தேன் என்றார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.