பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ்படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

பென் ஸ்டோக்ஸ் அடுத்த 3 மாதங்கள் கிரிக்கெட் விளையாட மாட்டார்; காரணம் என்ன?

அடுத்த மூன்று மாதங்களுக்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
Published on

அடுத்த மூன்று மாதங்களுக்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

அண்மையில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது, இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸுக்கு காயம் ஏற்பட்டது. அவருக்கு அடுத்த மாதம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.

கிரிக்கெட் விளையாட மாட்டார்

காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ள பென் ஸ்டோக்ஸ் அடுத்த 3 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாது என்பதை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து அணி அண்மையில் இந்தியாவுக்கு எதிரான தொடர்கள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இங்கிலாந்து அணியை அறிவித்தது. அந்த அணிகளில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை.

காயம் காரணமாக சொந்த மண்ணில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை பென் ஸ்டோக்ஸ் தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com