ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான அதிகாரபூர்வ அட்டவணை வெளியீடு!
படம் | ஐசிசி

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான அதிகாரபூர்வ அட்டவணை வெளியீடு!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அதிகாரபூர்வ அட்டவணையை ஐசிசி இன்று (டிசம்பர் 24) வெளியிட்டுள்ளது.
Published on

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அதிகாரபூர்வ அட்டவணையை ஐசிசி இன்று (டிசம்பர் 24) வெளியிட்டுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் முழுவதுமாக பாகிஸ்தானில் நடத்தப்படும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், தொடரானது ஹைபிரிட் மாடலில் நடத்தப்பட முடிவு செய்யப்பட்டது. இந்திய அணிக்கான போட்டிகள் துபையில் நடத்தப்பட உள்ளன.

இந்த நிலையில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அதிகாரபூர்வ அட்டவணையை ஐசிசி இன்று (டிசம்பர் 24) வெளியிட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி கராச்சியில் நடைபெறுகிறது. பிப்ரவரி 20 ஆம் தேதி இந்திய அணி அதன் முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி பிப்ரவரி 23 ஆம் தேதி துபையில் நடைபெறுகிறது. அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுக்கான நாள்களில் போட்டி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டால், அதற்கென கூடுதல் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் பட்சத்தில், இறுதிப்போட்டியானது துபையில் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com