பாக்ஸிங் டே டெஸ்ட்டில் வரலாற்று சாதனைகள்!

பாக்ஸிங் டே டெஸ்ட்டில் படைக்கப்பட்ட வரலாற்று சாதனைகள் பற்றி...
மெல்போர்ன் மைதானம்
மெல்போர்ன் மைதானம்படம்: எக்ஸ்
Published on
Updated on
1 min read

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.

பார்டர் - காவஸ்கர் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகளில் விளையாடி வருகின்றது.

இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியும் ஒரு போட்டி டிராவிலும் முடிந்துள்ளது. தற்போது, பாக்ஸிங் டே போட்டி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இன்று 5-வது நாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து வரும் நிலையில், புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.

அதிக ரசிகர்கள்

மெல்போர்ன் மைதானத்தில் டெஸ்ட் போட்டியைக் காண குவிந்த அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது.

முதல் நான்கு நாள்களில் 87,242, 85,147, 83,073, 43,867 எண்ணிக்கையிலான ரசிகர்கள் போட்டியைக் காண வருகை தந்தனர்.

ஐந்தாவது நாளான இன்று காலை 51,371 பேர் வருகை தந்த நிலையில், பிற்பகலில் இந்த எண்ணிக்கை 74,362 ஆக அதிகரித்தது.

மொத்தம் 373,691 ரசிகர்கள் 5 நாள்களில் மெல்போர்ன் மைதானத்துக்கு வருகை தந்து சாதனை படைத்துள்ளனர். மேலும், மெல்போர்ன் மைதானத்தில் 5-வது நாள் டெஸ்ட் போட்டிக்கு அதிகபட்ச ரசிகர்கள் வருகை என்ற சாதனையும் படைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 1937ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா - இங்கிலாந்து 6 நாள்கள் டெஸ்ட் தொடருக்கு மொத்தம் 350,534 ரசிகர்கள் வருகை தந்ததே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிக ஓவர்கள்

2024ஆம் ஆண்டு அதிக ஓவர்கள் வீசப்பட்ட டெஸ்ட் போட்டி என்ற சாதனையை பாக்ஸிங் டே போட்டி பெற்றுள்ளது.

இந்தாண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சமாக 2199 ஓவர்கள் வீசப்பட்டிருந்த நிலையில், அந்த சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com