
டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அந்த அணியின் இளம் பந்துவீச்சாளர் சோயப் பஷீர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 241 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய இளம் சுழற்பந்துவீச்சாளர் சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக புதிய சாதனை ஒன்றையும் சோயப் பஷீர் படைத்துள்ளார். மிக இளம் வயதில் (20 வயது மற்றும் 282 நாள்கள்) இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 5 வீக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனுக்குப் பிறகு டிரண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையும் அவரையேச் சேரும்.
டிரண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முத்தையா முரளிதரன் 8 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.