ஹார்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படாதது ஏன்? தேர்வுக் குழுத் தலைவர் விளக்கம்

அனைத்து சூழல்களிலும் விளையாடக் கூடிய கேப்டன் அணிக்கு தேவை -அஜித் அகர்கர்
ஹார்திக் பாண்டியா
ஹார்திக் பாண்டியா
Published on
Updated on
1 min read

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஹார்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படாதது குறித்து இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார்.

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளன. முதல் டி20 போட்டி, வருகின்ற 27ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வுபெற்ற நிலையில், துணை கேப்டனாக இருந்த ஹார்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இலங்கைக்கு எதிரான தொடரில் டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹார்திக் பாண்டியா
அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது இந்தியா: யுஏஇ அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

மேலும், ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக ரோஹித் சர்மா தொடரும் நிலையில், இரு தொடர்களுக்கும் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்விரு தொடர்களிலும் விளையாடும் ஹார்திக் பாண்டியா, ஒரு வீரராக மட்டுமே விளையாடவுள்ளார்.

பிசிசிஐயின் இந்த முடிவு ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்தை பெற்ற நிலையில், இலங்கை தொடருக்கு முன்பு மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார்.

அஜித் அகர்கர் கூறியதாவது:

”ஹார்திக் பாண்டியா மிக முக்கியமான வீரர் என்பதை உலகக் கோப்பையிலேயே நாம் பார்த்திருப்போம். எங்களுக்கு அவர் தேவை என்றாலும், அவரின் உடற்தகுதி பெரும் சவாலாக உள்ளது.

அனைத்து சூழல்களிலும் விளையாடக் கூடிய கேப்டன் அணிக்கு தேவை. ஹார்திக் பாண்டியா அணியில் தொடர்ந்து அங்கம் வகிக்கிறார். வீரர்களிடம் இருந்தும் பொதுவான கருத்துகளை பெற்றே முடிவெடுத்துள்ளோம்.

சூர்யகுமார் யாதவ் டி20 போட்டியின் சிறந்த பேட்டர். அவர் அனைத்து விதமான தொடர்களிலும் விளையாடுகிறார். கேப்டனுக்கு தேவையான அனைத்து திறன்களும் அவரிடம் உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com