மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது டிஎஸ்கே!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி டிஎஸ்கே அணி இறுதிப் போட்டிக்கு வாய்பை அதிகரித்தது.
பொல்லார்ட், பிராவோ
பொல்லார்ட், பிராவோபடம்: டிஎஸ்கே / எக்ஸ்
Published on
Updated on
1 min read

அமெரிக்காவில் நடைபெறும் டி20 தொடர் மேஜர் லீக் கிரிக்கெட் எனப்படும் எம்.எல்.சி கடந்த ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன.

சிஎஸ்கே அணி போல டிஎஸ்கே அணி, மும்பை இந்தியன்ஸ் போல மும்பை இந்தியன்ஸ் நியூ யார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகளும் உள்ளன.

இந்தத் தொடரில் பிளே ஆஃப் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் நியூ யார்க்கை ஃபாப் டு பிளெஸ்ஸி தலைமையிலான டிஎஸ்கே அணி வென்று இறுதிப் போட்டிக்கு வாய்பை அதிகரித்தது.

பொல்லார்ட், பிராவோ
ரியல் மாட்ரிட்: அதிக வருமானம் ஈட்டும் கால்பந்து அணியாக புதிய சாதனை!

மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் 20 ஓவர் முடிவில் 163/8 ரன்கள் எடுத்தது. டிஎஸ்கே அணி 18.3 ஓவரில் 167/1 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டு பிளெஸ்ஸி 72 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

பொல்லார்ட், பிராவோ
இலங்கை அணியில் ஒழுக்கம் தேவை: இடைக்கால பயிற்சியாளர் அதிரடி!

டிஸ்கே அணியில் கான்வே 51*, ஆரோன் ஆர்டி 40 *ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வித்திட்டார்கள். இந்த வெற்றிக்குப் பிறகு பொல்லார்டை பிராவோ கிண்டல் செய்தார். இவர்களது சண்டை சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தே இருக்கிறது. இருவர்களும் சிறந்த நண்பர்கள் என்பதால் ஜாலியாக கிண்டல் செய்து கொள்வார்கள்.

மற்றுமொரு பிளே ஆஃப் சுற்றில் ஸ்மித் தலைமையிலான வாஷிங்டன் ஃபீரிடம் அணியும் கம்மின்ஸ் தலைமையிலான சான்பிரான்சிஸ்கோ யூனிகார்ன் அணியும் மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com