டெஸ்ட் தொடரை முழுமையாக வெல்வோம் என கனவிலும் நினைக்கவில்லை: முன்னாள் நியூசி. வீரர்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் முழுமையாக கைப்பற்றுவோம் என கனவிலும் நினைக்கவில்லை என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் தொடரை முழுமையாக வெல்வோம் என கனவிலும் நினைக்கவில்லை: முன்னாள் நியூசி. வீரர்
படம் | AP
Published on
Updated on
2 min read

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் முழுமையாக கைப்பற்றுவோம் என கனவிலும் நினைக்கவில்லை என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இலங்கைக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது.

இந்திய அணி நியூசிலாந்தை 3-0 என்ற கணக்கில் வென்று தொடரைக் கைப்பற்றும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், டெஸ்ட் தொடரை 3-0 எனக் கைப்பற்றி இந்தியாவுக்கும், கிரிக்கெட் உலகுக்கும் அதிர்ச்சியளித்தது நியூசிலாந்து. இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றி நியூசிலாந்து வரலாறு படைத்தது.

கனவிலும் நினைக்கவில்லை

சொந்த மண்ணில் அசைக்க முடியாத அணியாக வலம் வந்த இந்திய அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த நியூசிலாந்து அணிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றுவோம் என கனவிலும் நினைக்கவில்லை என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ராஸ் டெய்லர் (கோப்புப் படம்)
ராஸ் டெய்லர் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மற்ற நாடுகளைப் போல நியூசிலாந்து அணியை நானும் ஆச்சரியமாக பார்க்கிறேன். இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு நியூசிலாந்து அணி விளையாடியது. ஆனால், இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றி கிரிக்கெட் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது நியூசிலாந்து. நியூசிலாந்து மக்களும், நியூசிலாந்து அணி வீரர்களும் இந்த வெற்றியில் திளைத்துள்ளனர்.

நியூசிலாந்தில் ரக்பி விளையாட்டே பிரதானமானது. கிரிக்கெட்டுக்கு அதிக ரசிகர்களை ஈர்க்க நியூசிலாந்து அணி போராடி வருகிறது. இலங்கைக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, கிரிக்கெட்டின் நிலை குறித்து கவலை இருந்தது. ஆனால், இந்தியாவுக்கு எதிரான இந்த வரலாற்று வெற்றி அனைத்தையும் மாற்றியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றிக்குப் பிறகு நியூசிலாந்தில் கிரிக்கெட்டுக்கு இவ்வளவு வரவேற்பு அளிக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, நியூசிலாந்து மக்களுக்கும், நியூசிலாந்து அணி வீரர்களுக்கும் புதிய நம்பிக்கை பிறந்தது. ஆனால், இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றுவோம் என கனவிலும் நினைக்கவில்லை. டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி மிகச் சிறப்பாக இந்த வரலாற்று வெற்றியை சாத்தியமாக்கியுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com