நியூசி.க்கு எதிரான தோல்வி ஆஸி.க்கு எதிரான தொடரில் தாக்கத்தை ஏற்படுத்துமா? முன்னாள் வீரர்கள் பதில்!

சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக ஏற்பட்ட தோல்வி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
நியூசி.க்கு எதிரான தோல்வி ஆஸி.க்கு எதிரான தொடரில் தாக்கத்தை ஏற்படுத்துமா? முன்னாள் வீரர்கள் பதில்!
படம் | AP
Published on
Updated on
2 min read

சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக ஏற்பட்ட தோல்வி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்களான ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. மூன்று போட்டிகளிலும் இந்திய அணியை வீழ்த்தி, நியூசிலாந்து அணி தொடரை முழுமையாக கைப்பற்றியது. இந்தியாவுக்கு எதிராக வரலாற்று வெற்றியையும் பதிவு செய்தது.

தாக்கம் இருக்கும்

சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக ஏற்பட்ட தோல்வி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆடம் கில்கிறிஸ்ட் (கோப்புப் படம்)
ஆடம் கில்கிறிஸ்ட் (கோப்புப் படம்)

இது தொடர்பாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் பேசியதாவது: நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் தொடரை இழந்தது இந்திய அணி வீரர்களுக்கும், இந்திய அணிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில கடினமான கேள்விகளை அவர்கள் அவர்களைப் பார்த்து கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், இந்த காரணத்தினால் இந்திய அணியை எளிதில் வீழ்த்திவிடலாம் எனக் கூறிவிட முடியாது என்றார்.

டேவிட் வார்னர் (கோப்புப் படம்)
டேவிட் வார்னர் (கோப்புப் படம்)

இது தொடர்பாக டேவிட் வார்னர் பேசியதாவது: பார்டர் - கவாஸ்கர் தொடருக்கு முன்பாக இந்திய அணி அதன் சொந்த மண்ணில் தொடரை இழந்துள்ளது ஆஸ்திரேலியாவுக்கு உதவியாக இருக்கும். 3-0 என தொடரை இழந்த நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. ஆஸ்திரேலிய அணியில் உலகத் தரத்திலான மூன்று வேகப் பந்துவீச்சாளர்களும், ஒரு சுழற்பந்துவீச்சாளரும் இருக்கின்றனர். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் நான் இருந்தால், சிறிது பதற்றமாக இருப்பேன் என்றார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com