உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 2-வது இடத்துக்கு சறுக்கியுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரையும் முழுமையாக கைப்பற்றியது.
தரவரிசையில் பின்னடைவு
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 2-வது இடத்துக்கு சறுக்கியுள்ளது. இந்திய அணியின் வெற்றி சதவிகிதம் 62.82 சதவிகிதத்திலிருந்து 58.33 சதவிகிதமாக குறைந்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி 62.50 சதவிகித வெற்றிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. 55.56 சதவிகித வெற்றிகளுடன் இலங்கை அணி மூன்றாவது இடத்திலும், 54.55 சதவிகித வெற்றிகளுடன் நியூசிலாந்து அணி நான்காவது இடத்திலும், 54.17 சதவிகித வெற்றிகளுடன் தென்னாப்பிரிக்க அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
முதலிடத்தில் வலுவான நிலையில் இருந்த இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவில் அதன் இடத்தை ஆஸ்திரேலியாவிடம் இழந்துள்ளது. இந்த நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தரவரிசையில் முதல் இரண்டு இடங்களுக்குள் நீடிக்க இரு அணிகளுக்கும் பார்டர் - கவாஸ்கர் தொடரை வெல்வது இன்றியமையாததாக மாறியுள்ளது.
இதையும் படிக்க: இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்து நியூசிலாந்து சாதனை
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்த இந்தியா!

வெளியேறியது இந்திய மகளிர் அணி

உலக டேபிள் டென்னிஸ்: இந்திய ஆடவர் அணி வெற்றி

யு20 சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டியில் வங்கதேசத்துடன் மோதும் இந்தியா!
வீடியோக்கள்
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு


