கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

நியூசி.க்கு எதிரான தோல்விக்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன்: ரோஹித் சர்மா

நியூசிலாந்துக்கு எதிரான வரலாற்று தோல்விக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேப்டன் ரோஹித் சர்மா - படம் | AP

Published On :

நியூசிலாந்துக்கு எதிரான வரலாற்று தோல்விக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியது.

வரலாற்று வெற்றி

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 147 ரன்கள் என்ற எளிமையான இலக்கை நோக்கி களமிறங்கியது இந்திய அணி. இருப்பினும், மோசமான பேட்டிங்கால் இந்திய அணி 121 ரன்களுக்கு ஆட்டமிழந்து, டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது.

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான வரலாற்று தோல்விக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு பத்திரிகையாளர்களிடம் கேப்டன் ரோஹித் சர்மா பேசியதாவது: நியூசிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் தோல்வி, எனது கிரிக்கெட் பயணத்தில் மிகவும் மோசமானது. இந்த தோல்விக்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். இந்த தோல்வியை ஏற்றுக் கொள்வதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது. இந்த தோல்வியை எங்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்த தொடர் முழுவதும் நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டது. இந்த தொடரில் நாங்கள் நிறைய தவறுகள் செய்துவிட்டோம். முதல் இரண்டு போட்டிகளின் முதல் இன்னிங்ஸில் எங்களால் அணிக்காக அதிக அளவில் ரன்கள் குவிக்க முடியவில்லை. ஒரு அணியாக நாங்கள் முழுமையாக தோல்வியைத் தழுவியுள்ளோம்.

பேட்டிங்கில் சில திட்டங்களோடு களமிறங்கினேன். ஆனால், அவை எனக்கு கை கொடுக்கவில்லை. நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதற்கான முடிவு எங்களுக்கு கிடைத்துள்ளது. கேப்டனாக இந்த தொடரில் நான் சிறப்பாக செயல்படவில்லை. பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட தவறிவிட்டேன் என்றார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாக இழப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.