இந்தியா ஏ அணியில் கே.எல்.ராகுல்! மோசமாக விளையாடி 161க்கு ஆல் அவுட்!

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி 161க்கு ஆல் அவுட்டானது.
இந்தியா ஏ அணியினர் மோசமான பேட்டிங்.
இந்தியா ஏ அணியினர் மோசமான பேட்டிங். படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா
Published on
Updated on
1 min read

இந்தியா ஏ அணி ஆஸ்திரேலியா ஏ அணியுடன் 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணியில் கே.எல்.ராகுல் இடம்பிடித்தார். இருந்தும் மோசமான நிலைமையிலேயே இந்தியா ஏ அணி இருக்கிறது.

முதல் இன்னிங்ஸில் 161க்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக துருவ் ஜுரேல் 80 ரன்கள் எடுத்தார்.

ஆஸி. ஏ அணி சார்பில் நெசீர் 4, வெப்ஸ்டர் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள்.

முதல் நாள் முடிவில் ஆஸி. ஏ அணி 17.1 ஓவரில் 53/ 2 ரன்கள் எடுத்துள்ளது.

மார்கஸ் ஹாரிஸ் 26, சாம் கொன்ஸ்டஸ் 1 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்கள்.

நியூசி. இடம் வரலாற்று தோல்வியடைந்த இந்திய அணி அடுத்து ஆஸி.உடன் பார்டர் - கவாஸ்கர் தொடர் விளையாட இருப்பதால் இந்தப் போட்டிகள் முக்கியத்துவம் பெருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com